பன்முகத் தன்மையும் ஆளுமை திறனும்
சந்திப் ஆனந்த்..!             வைணவப் பெரியாராக வாழ்ந்து வரும் நன்மக்கள் சேவகர், தலைவர்களின் செல்லப்பிள்ளை அடக்கத்தின் மறு உருவம் ஜெகத்ரட்சகன் அவர்களின் தகுதிமிக்க மகன் தான் சந்தீப் ஆனந்த். பிறந்தது கல்கத்தா என்றாலும் தமிழ் கலாச்சாரத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவுடன், மென்பொருள் பொறியியல் படிப்பின் சிறப்புகளை மேலும் நன்கு படிக்க அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மாணவராகச் சேர்ந்து சிறப்பாக தேறி வந்தவர் சந்தீப் அவர்கள்.

தனது தந்தையாரின் கைப்பிடித்து நடந்து வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர், வாழ்வின் நெளிவு சுளிவுகளை நன்கு கற்றவர். கல்லூரிகள், ஓட்டல்கள் மற்றும் மக்கள் நலன், தொழிற்சாலைகள் என்று பல தொழில்களைத் திறம்பட நிர்வகித்து வரும் சந்தீப் அவர்கள் அனைத்தையும் பலரும் போற்றத்தக்க வகையில் வழிநடத்தி வருகிறார். எளிமையாக இருந்து பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவர்கள் கல்லூரிகளில் இல்லாத படிப்புகளே இல்லை என்று சொல்லலாம். பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல், எம்.பி.ஏ என்று பலப்பல துறைகளில் பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்புகளை  அறிமுகப்படுத்தி, அகில இந்திய அளவில் முன்மாதிரி பல்கலைக்கழகமாக இவரது கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது.

பாரத் பல்கலைக் கழகம், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திறமையுள்ளவர்கள், ஒழுக்கம், ஒழுங்குள்ள இளைஞர்களைக் கண்டு பிடித்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி ஊக்குவிக்கும் குணத்தினால், முன்னேற்றத்தில் இருந்து முன்னேற்றம் என்று வளர்ச்சிப் பாதையில் புதிய மைல் கற்களைப் படைத்துக் கொண்டிருக்கும் சந்தீப் ஆனந்த் தமிழக இளைஞர்களுக்கு நல்ல ரோல் மாடல்.

“அரசியலில் ஆர்வம்“ இருந்தாலும், தந்தையார் உடல் நலத்துடன் அரசியலிலும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். அதன் அடிப்படையில் அவருக்கும் அரசியல் ஆர்வம் இருந்தாலும் அவற்றை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்ல என்று உணர்ந்து மேலும் பல தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களை தொடங்கலாம். அதன் மூலம் கல்வி கூடங்கள் எட்டாக் கனியாக இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் கல்வி கண் திறக்க வேண்டும் என்பதே இவரது ஆசையாக இருக்கிறது இலட்சியமாக இருக்கிறது.

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாதோர் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்று உயரிய இலக்கோடு அவர் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்வதில் நாட்டம் கொண்டுள்ளார். சரியான திட்டமிடல், கடின உழைப்பு தந்தையின் வழிகாட்டுதல் தாயின் ஆசிர்வாதம் இவை வெற்றிக்கான படிக்கட்டுகளாக சந்தீப் ஆனந்த் அவர்களுக்கு அமைந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது. 

ஒழுக்கம், ஒழுங்கு, கல்வி, அடக்கம், எளிமை, திறனறி ஆற்றல் போன்றவற்றின் மொத்த உருவமாகத் திகழும் சந்தீப் ஆனந்த் “அக்னிமலர்கள்” தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிகரத்தைத் தொட வேண்டும் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும். தந்தையாருக்கு மேலும் மேலும் பெருமை சேர்த்து, தமிழர்களின் முகமாகவும், தமிழகத்தின் முகவரியாக மலரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.   

- டெல்லிகுருஜி