சட்டசபை உறுதிமொழி குழு கூட்டம்
புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை உறுதி மொழிகள் குழு ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை கருத்தரங்கு அறையில் நடந்தது. கூட்டத்திற்கு உறுதிமொழிகள் குழு தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, வி.பி.ராமலிங்கம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், அசோக்பாபு, சிவசங்கரன், சட்டசபை செயலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், மின்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதல்-அமைச்சர், துறை அமைச்சர்கள் சட்டசபையில் அறிவித்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, ஸ்மார்ட் சிட்டி திட்ட துணை தலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன், மின் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் கிட்டிபலராம் உட்பட அதிகாரிகள் விளக்கமளித்தனர். நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளை உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.