சென்னை வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜனதாவினர் திட்டம்சென்னை:

பிரதமர் மோடி பொறுப்பேற்று 8 ஆண்டுகள் ஆவதையொட்டி அதனை நாடு முழுவதும் பா.ஜனதா கட்சியினர் கொண்டாட திட்டமிட்டு உள்ளனர். இதையொட்டி வருகிற 26-ந்தேதி சென்னை வரும் மோடியை வரவேற்பதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இது தொடர்பாக தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு காரில் செல்லும் பிரதமர் மோடியை வழிநெடுக ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் வரவேற்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தயாராகி உள்ளனர்.