தமிழக இளைஞர்களே! விழித்தெழுங்கள்..!


தமிழக இளைஞர்களுக்கு ஒன்றிய மோடி அரசு இழைத்துவரும் அநீதிகள் எல்லை மீறுகின்றன. ஏற்கெனவே, தமிழகத்தில் அமைந்துள்ள தென்னக ரயில்வே நிலைய வேலை வாய்ப்புகள் ஐ.சி.எப் வேலை வாய்ப்புகள் ராணிப்பேட்டை, திருவெறும்பூரில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவன வேலை வாய்ப்புகள், தமிழகத்தில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகம் வேலை வாய்ப்புகள், வங்கிகள், சாஸ்திரிபவன், ராஜாஜி பவன் மற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள ஒன்றிய அரசின் பல்வேறு நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றின் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தமிழக வேலை இல்லாது வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தத்தளித்து வரும் தமிழக இளைஞர்களுக்கு திட்டமிட்ட வழிகளில் மறுக்கப்பட்டு, அத்தகைய வேலை வாய்ப்புகளில் சுமார் 90 சதவீதம் வட இந்திய வாலிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கு தொடர்கிறது.

இந்த நிலையில், இப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க வேலை வாய்ப்புகளை ‘கேட்’ GATE Graduate Aptitude Test in Engineering) மற்றும் கெட் (GET - Graduate Executive Trainess) போன்ற தேர்வுகளில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் என்று அறிவித்து வட இந்திய வாலிபர்களுக்கு பொறியாளர்களுக்கு தமிழகத்து வேலை வாய்ப்புகளை பறித்துக் கொடுத்துவிட ஒன்றிய மோடி அரசு தனது திட்டங்களை அறிவித்துள்ளது. நெய்வேலி சுரங்கத்திற்கு தங்கள் நிலங்களை கொடுத்துள்ள அந்தப் பகுதி மக்களின் வாரிசுகளுக்குத் தான் அந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நிலம் கையகப்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளை தமிழக அரசு ஆதரித்துள்ளது.

- பொற்கோ