மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன்: கவர்னர் ஆர்.என்.ரவி



சென்னை:

உலகில் மிக தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டதை போல தமிழ் மிகவும் பழமையான மொழி.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

முதல்அமைச்சர் சட்ட சபையில் அறிவித்தபடி தமிழர்கள் 4500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பில் பயன்பாட்டை அறிந்துள்ளவர்கள். நாட்டின் வளர்ச்சி தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகின்றன. சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன்.

இதனால் நாடு முழுவதும் தமிழை பரப்ப வேண்டும். பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும்.