சென்னையில்
மெட்ரோ ரெயில் 2-வது கட்டப்பணி-
பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்ட
ராட்சத எந்திரங்கள் தயார்சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது கட்டப்பணி 4 வழித்தடங்களில் நிறைவேற்றப்படுகிறது. 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிற இந்த திட்டம் 2025-ல் முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இத்திட்டத்தில் 42.6 கி.மீ தூரத்துக்கு பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக சுரங்கப்பாதையில் மட்டும் 48 ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.

சுரங்கப்பாதை அமைப்பதற்காக 23 ராட்சத சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டன. சுரங்கப்பாதையை தோண்டும் பணியை டாடா புராஜெக்ட் லிமிடெட் நிறுவனம் செய்கிறது.

சுரங்கம் தோண்டும் முதல் எந்திரங்களை நிறுவி அதன் செயல்பாட்டை பரிசோதிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தன. இது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணியில் புதிய சுரங்கம் தோண்டும் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. கம்பெனியின் பரிசோதனை நடத்தப்பட்டது. எந்திரத்தின் முகப்பு பகுதியை இயக்கி அது பூமியை தோண்டும் போது எந்த அளவிற்கு அழுத்தம் ஏற்படுகிறது என்பது ஆய்வு செய்யப்பட்டது.

எந்திரத்தின் முகப்பு பகுதி அதிவேகமாக சுழன்று சுற்றும் போது அந்த எந்திரத்தின் முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அளவிற்கு மண்ணை குடைந்து கொண்டு செல்லும் மெட்ரோ ரெயில் 2-வது கட்ட சுரங்கப்பாதை தொடங்குவதற்கான ராட்சத எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

புரசைவாக்கம், கெல்லிஸ், ராயப்பேட்டை, டைடல் பார்க், கிரின் வேஸ் சாலை ஆகிய பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.