திருமண விழாவில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வன்னியர்களுக்கு நம்பிக்கை தருமா?



கட்டட தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் மற்றும் வேளச்சேரி டெல்லிபாபு இல்லத் திருமண விழா நிகழ்ச்சியில் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சுயமரியாதை திருமணத்தை ஆதரித்து பேசும் பொழுது வன்னியர்களுக்கு வழங்கிய வேண்டிய 10.5 சதவிகிதம் ரத்து செய்வதை குறித்தும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். “நான் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள்” அதே போல் டெல்லிக்கு சென்றதையும் பற்றி குறித்து பேசுகிறார்கள். இவர்களுக்கு நான் சொல்லுகின்ற பதில் நான் டெல்லிக்கு சென்றது யார் காலில் விழுவதற்கு அல்ல. நான் பதவியேற்கும் பொழுதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறித்தான் பதவியேற்று கொண்டேன்.”

கருணாநிதி வழியை பின்பற்றி தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நான் வன்னியர்களின் இடஒதுக்கீட்டு பிரச்சனையில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் முன்வைத்த வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக முயற்சி செய்வேன் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து பல பகுதிகளில் இருந்தும் சாதி, மத, மொழி இவைகளை கடந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது பலர் வந்திருந்தாலும் திருமண வீட்டார் இருவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு வந்தவர்கள் பெரும்பாலும் வன்னியர்களே அதிகமாக பங்கேற்று இருப்பதால் 10.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு குறித்து வன்னியர்கள் வருத்தத்தில் இருந்தாலும் திருமண வீட்டில் முதல்வர் அவர்களின் பேச்சும் வேல்முருகன், பீட்டர் அல்போன்ஸ், அமைச்சர் பொன்முடி போன்றவர்களுடைய பேச்சும் முதல்வர் அவர்களுடைய அறிவிப்பும் வன்னியர்களுக்கு நம்பிக்கை தருமா? 10.5 சதவிகித இடஒதுக்கீடு கிடைப்பதற்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமா? அல்லது நீதிமன்றத்தில் தரவுகளை திரட்டி மறுசீராய்வு மனு செய்யுமா? போன்ற எதிர்பார்ப்புகள் வன்னியர்களுக்கு எழுந்துள்ளது. இடஒதுக்கீட்டு விஷயத்தில் முதல்வரின் நடவடிக்கை எவ்வாறு அமையும் என்பதற்கு விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரின் நல்ல முடிவை எடுப்பார் என்று பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

- டெல்லிகுருஜி