தெலுங்கு வருடபிறப்பு- தி.நகர் திருப்பதி தேவஸ்தான கோவிலில் சிறப்பு தரிசனம்
தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் சென்னை தியாகராயநகரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்ப போலீசார் தடுப்பு கம்பிகள் அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டனர். கோவிலில் மலர்கள் அலங்காரம் முழுமையாக செய்யப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இசையமைப்பாளர் இளையராஜா உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்