முடியும் வரை கடமைகளைச் செய்வேன்- கி.வீரமணி அறிக்கை

   


சென்னை:

தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலை நிறுத்திடவும், பகுத்தறிவைப் பரப்பிடவும், பெண்ணடிமைத் தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அவரின் சிந்தனைகளும், எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன.

இந்த நிலையில் பெரியாருக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைமை பொறுப்பேற்று நடத்தி வரும் கி.வீரமணி அந்த பொறுப்பில் 44 ஆண்டுகளை நிறைவு செய்து நேற்று 45-வது ஆண்டை தொடங்கி உள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘மானமிகு சுயமரியாதைக் காரர்’ நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருச்சி, தஞ்சை கல்வி நிலைய நிகழ்ச்சிகளின்போது, அத்துணை அமைச்சர் பெருமக்களையும் வைத்துக்கொண்டு, ‘‘இதைக் கண்டு மகிழ அய்யா இல்லையே!’’ என்று பூரித்துப் புளகாங்கிதம் அடைந்ததோடு, நானே வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்து கொள்ளக்கூடிய வகையில் ‘தமிழர் தலைவர்’ என்று அவரது வாயால் வாழ்த்தியதைவிட, என் பணிக்கு, எனது ஆரம்பகால கூட்டுத் தோழர்கள் முதல் இன்றுள்ள கூட்டுப் பணித் தோழர்கள்வரை என்னை நன்கு வேலை வாங்கிட, என் உடல்நிலைமீது கொண்ட கவலையை அக்கறையோடு பகிர்ந்துகொள்ளும் வகையில் தந்து, குன்றாத உற்சாகத்தை வற்றாத பாசத்தைக் கொட்டி, என்னை வாழ வைத்துக் கொண்டுள்ளார்கள்!

அவர்கள் அத்துணை பேருக்கும் இந்நாளை நன்றி குவிக்கும் நாளாகவே கருதி, அனைவருக்கும் மெத்தப் பணிவுடனும், கனிவுடனும் தலைதாழ்ந்த வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.

எனது வயது எனக்கு ஒரு பொருட்டல்ல.

தனது இறுதிக்காலமான 5 ஆண்டுகளில் ஒரு கையில் மூத்திரச் சட்டியைச் சுமந்துகொண்டு, மறுபுறம் தோழர்களின் தோளுடன் மேடையில் வலியின் தாக்குதல் வந்தபோதும், பேச்சை முடிக்காது புரண்டு எழுந்து சிங்கம்போல கர்ஜித்துக் கடமையாற்றிய நமது தந்தையின் ஒப்பற்ற தொண்டினை நினைத்தால், வீட்டில் ஓய்வு எடுத்து, சாய்வு நாற்காலியில் அமர முடியுமா?

அவர்களது வாழ்நாள் மாணவன் நியாயமாக எப்படி நடந்துகொள்ளவேண்டும்?

எம் கொள்கை உறவுகளுக்கும், நல்லெண்ணத்தோடு வாழ்த்துவோருக்கும்!

உங்கள் நம்பிக்கைக்கு என்றும் உண்மையாக உழைப்பேன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- பகுத்தறிவுப் பணியில் இருந்து இறங்கி இருந்தாலும், திராவிடர் கழகத்தின் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகளை கடந்திருக்கும் கி.வீரமணி அவர்களை வாழ்த்துகிறேன்.