வன்னியர்களுக்கும், முக்குலோத்தோர்களுக்கும் காமராஜர் செய்த சூழ்ச்சி!
பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் பயணத்தில் அவரது செல்வாக்கை பயன்படுத்தி, ஒரு மோசமான நிலையில் இருந்த அவர் சார்ந்த சமுதாயம் (நாடார், கிராமினி, சாணார்) இன்றைக்கு பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் சிறு வாணிபத்திலும் பெட்டி கடை முதல் உயரிய தொழில்கள் வரை ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் இப்படி பல வகைகளில் பெருந்தலைவர் காமராஜர் சமுதாயம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதை என்பதை பார்க்கும் போது வேறு எந்த சமுதாயத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம் காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது அவர் சார்ந்த சமுதாயம் பெற்றுள்ளது என்றால் இது வரவேற்க தகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் போட்டி போடுகின்ற அளவிற்கு நவீன தொழில்துறை (எச்.சி.எல்) சிவ நாடார் ஈடுபட்டிருக்கிறார் என்றால் இதற்கு காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது அவருக்கு ஏற்பட்ட ஒரு நம்பிக்கை அடையாளம் என்று தான் குறிப்பிடலாம். அதே போல் பத்திரிகை துறையில் தினத்தந்தி, தினகரன், மாலைமுரசு, மக்கள் குரல், மாலை மலர், மற்றும் தொலைக்காட்சிகள் தந்தி, மாலைமுரசு தொலைக்காட்சி, இப்படி பல நிறுவனங்கள் பத்திரிகை துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது இதுவும் வரவேற்க தகுந்த ஒன்று தான் என்றாலும் இது போன்றதொரு இன்றைக்கு தமிழிசை சவுந்தர்ராஜன் புதுச்சேரி மாநில ஆளுநர் மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் என்ற இரண்டு பதவிகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதே போல் பல்கலைகழகத்தில் துணைவேந்தர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என்று பலதரப்பட்ட பதவிகளிலும் இருந்து வருகிறார்கள். ஆனால் நாடு விடுதலை பெற்றப் பின் நடைபெற்ற பொது தேர்தலில் அரசியல் ரீதியாக மாபெரும் வெற்றிப் பெற்று காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் கால்ஊன்றுவதற்கு ஆதரவு கரம் நீட்டிய தமிழகத்தின் தனிப்பெரும் சமுதாயமான வன்னியர்கள் அன்று முதல் இன்றுவரை லட்சக்கணக்கான கோடிகளுக்கு சொந்தகாரர்களாக பரம்பரையாக இருந்த பொழுதும் அரசியலில் நிரந்தரமான ஒரு முகவரியை பெறமுடியாமல் போய்விட்டது. அதே போல் தெற்கே தேவர்கள் சமுதாயம் நாட்டின் வளர்ச்சிக்காக பல தியாகங்களை செய்திருந்தாலும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தனது சொத்துக்களை பொதுமக்கள் நன்மைக்காக அர்ப்பணித்திருந்தாலும் அரசியலில் உயர் பதவியை அவரால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. வடக்கே வன்னியர்கள், தெற்கே (முக்குலோத்தோர்கள்) இரண்டு பெரும் சமுதாயங்களும் பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் சூழ்ச்சியால் அரசியலில் உயர்ந்த இடத்தை அடைய முடியாமல் போய்விட்டதே என்று தான் கூறவேண்டும். அதற்கு சான்றாக தான் இன்று வாட்ஸ்அப் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறு குறிப்பு.
இந்திய விடுதலைக்கு முன்பும் இந்திய விடுதலைக்குப் பின்பும் ஏறத்தாழ முப்பதாண்டு காலம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் காமராஜ நாடார். இந்த முப்பதாண்டுகளில் தமிழகத்தில் உள்ள பலமான சமூகங்கள் எவை, பலமில்லா சமூகங்கள் எவை என்பதை தலைகீழ்பாடமாகக் கற்று தேர்ந்தார் காமராஜர் நாடார். பலமான சமூகங்களின் அரசியல் செல்வாக்கு தன் தலைமைப் பதவிக்கு ஆபத்தானது என்பதைத் தீர்க்கமாக உணர்ந்து தெளிந்தார்.
வடக்கே வன்னியர் சமூகம் மிக பலமான சமூகம். தெற்கே முக்குலத்தோர் சமூகம். இந்த இரண்டு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் அரசியல் பலம் பெறுவது தன் தலைமைப் பதவியைப் பறித்துவிடும் எனப் பயந்தார் காமராஜர். இந்த பயத்தின் காரணமாக இவ்விரு சமூகங்களைச் சேர்ந்த விடுதலைப் போராளிகள் எவ்வளவு வீரமானவர்களே ஆனாலும், எவ்வளவு உன்னதமான தியாகிகளேயானாலும் அவர்களின் போராட்ட வரலாற்றை மூடிமறைத்தார். இருட்டடிப்பு செய்தார். இந்த இரு சமூகத்தவர்களுக்கும் அரசியல் வாய்ப்பினைத் தராமல் ஒதுக்கினார் ஒடுக்கினார்.
இந்த சதியில் புதைக்கப்பட்டது தான் சர்தார் பு.மு.ஆதிகேசவநாயகர் மற்றும் கடலூர் மு.அஞ்சலையம்மாள் போன்றோரின் விடுதலைப் போராட்ட தியாக வரலாறு.
காமராசர் காலத்தில் புதிதாக கதர்சட்டை போட்ட பண்ணையார்களும், பணக்காரர்களும் சுதந்திர போராட்டம் என்றால் காசுக்கு எத்தனை என கேட்கும் ஆதிக்க வந்தேறி சாதியினர் என்பதும், அரசியலில் வாய்ப்புகள் தரப்பட்ட அத்தனைபேரும் சிறுபான்மைச் சாதியினர் என்பதும் நினைக்க கொதிக்கும் வன்னியர் நெஞ்சம்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த குறுங் செய்தியை பார்க்கும் பொழுது இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியில் அதிகம் படித்த இளைஞர்களும், அரசு அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும் உயர்பதவியில் உள்ளவர்களும் பெருந்தலைவர் காமராஜரின் கூற்றை உற்று நோக்கி பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் தற்பொழுது வந்துள்ளது என்பதை உணர வேண்டும். குறிப்பாக வன்னிய குல் சத்திரியர்களும் மற்றும் முக்குலோத்தோர் சமுதாயமும் தமிழ், தமிழ் மொழி, தமிழ் நிலம், என்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் அரசியல் ஆட்சி அதிகாரம் அதிக அளவில் இரு சமுதாயங்களும் கைப்பற்ற முடியாமல் பெயரளவிற்கு பதவிகளை வகித்துக் கொண்டு பதவியில் இருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டு அப்பாவி மக்களான இரு சமுதாயத்தினரையும் கைதூக்கி விடுவதற்கு பதிலாக அரசியல் கட்சி தலைவர்களுக்கு கட்சி கட்டுப்பாடு என்ற அடிப்படையில் பல்லாக்கு தூக்கி கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் பெயரை சொல்லிக் கொண்டு சிறுபான்மை சமுகத்தை சார்ந்த மிட்டா மிராசு, கோடீஸ்வரர்கள், பதவி சுகத்தை அனுபவித்தார்கள். அதற்கு ஏற்றார்போல் தனது அரசியல் பயணத்தில் பெரும் முதலாளிகளுக்கு கதவை திறந்துவிட்ட காமராஜர் அவர்கள் கல்வி சாலைகளை திறந்தார்.
மதிய உணவு- திட்டத்தை அறிவித்தார். பல தொழிற்சாலைகளை திறப்பதற்கு காரணமாக இருந்தார். பல இடங்களில் நீர்நிலைகளை தேக்கி வைப்பதற்கு அணைகளை உருவாக்கினார். ஏழை பங்காளன், அரசியல் அப்பழுக்கற்றவர், இப்படியெல்லாம் அவருக்கு பெயருண்டு. ஆனால் அவருக்குப் பிறகு 60 ஆண்டுகள் ஆகியும் அவரது பொதுசேவையும், மக்கள் பணியும் எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இதுவரை அமைக்க முடியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திராவிட கட்சிகள் ஆட்சியை கைப்பற்றி இன்றுவரை தமிழ்நாட்டில் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் சொற்ப மக்கள் தொகை கொண்ட சில சமுதாயங்கள் இன்றும் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. எந்த காமராஜர் பெயரை சொல்லி தங்களை வளர்த்துக் கொண்டார்களோ தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொண்டார்களோ அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களே திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான நல்லாட்சியை அப்புறப்படுத்துவதற்காக பத்திரிகைகள் மூலம் திராவிட கட்சிகளை ஆதரித்து காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்தி சட்டமன்ற தேர்தலில் காமராஜரையே தோற்கடித்து இன்றுவரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையாமல் இருப்பதற்கும் காரணிகளாக காமராஜர் சார்ந்த சமுதாயம் இருந்துள்ளது என்பதை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் இரண்டு பெரும் சமுதாயமான வன்னியர், முக்குலோத்தோர் இரு சமுதாயத்திற்கும் எதிராக காமராஜர் இருந்து வந்தார் என்ற தகவலை இந்த குறுஞ்செய்தி தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. இன்றைய தலைமுறையினர்களுக்கு இந்த தகவலை பதிவு செய்கிறது ‘அக்னிமலர்கள்’.
இதே போன்று தான் காங்கிரஸ் கட்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கவியரசர் கண்ணதாசன், ஈ.வி.கே.சம்பத், எழுத்தாளர் ஜெயகாந்தன், போன்ற பிரபாலமானவர்களும் காமராஜரால் ஓரங்கட்டப்பட்டவர்கள் என்பதை பார்க்கும் பொழுது தெற்கே பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வடக்கே எஸ்.எஸ்.ராமச்சாமி படையாட்சியார் போன்றவர்களும் அரசியல் அதிகாரத்தை இழப்பதற்கு பெருந்தலைவர் காமராஜரே காரணமாக இருந்தார் என்ற செய்தியும் வரலாறு மறைத்துவிட்டது என்பதை தான் தொடர்ந்து வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டிய தருணம்.
- டெல்லிகுருஜி