உண்மையை மறைக்கும் திமுக எம்.பி. இளங்கோவன் சர்ச்சை பேச்சு!
வன்னியர்கள் கோபம்…!




திமுகவின் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் நாடாளுமன்ற மேலவையில் பேசும் பொழுது சத்திரியர்கள் என்ற பெயர் தென்னாட்டில் இல்லை என்றும், சத்திரியர்கள் என்ற சொல் மனு சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டது என்றும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். சத்திரியர்கள் இந்தியா முழுவதும் வசிக்கிறார்கள் பல மாநிலங்களில் சத்திரியர்கள் முதலமைச்சர்களாக பதவி வகிக்கிறார்கள். குறிப்பாக மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், போன்ற மாநிலங்களில் சத்திரியர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதை டி.கே.இளங்கோவன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமூக நீதி காவலராக வி.பி.சிங் முன்னாள் பிரதமர் இந்தியாவை ஆட்சி செய்த சத்திரியர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புதுறை அமைச்சராக விளங்கும் ராஜ்ராத்சிங் அவர்கள் சத்திரியர் என்பதும் திமுகவினருக்கும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

திமுக கழகத்தை ஆரம்ப கட்டத்தில் பட்டி தொட்டிகளிளெல்லாம் எடுத்துச் சென்று காங்கிரசுக்கு எதிராக இயக்கங்களை கட்டி எழுப்பிய வரலாற்று தலைவர்களெல்லாம் தமிழ்நாட்டில் வாழ்ந்த சத்திரியர்கள் என்பதை இந்த நேரம் நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும். திரும்பி பார்க்கும் பழக்கம் இருக்குமேயானால் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு வரலாறு புரிந்து இருக்கும். தென்னிந்தியாவில் சத்திரியர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் வரலாற்று ஆசிரியர் டஸ்லின் என்ற ஆங்கிலேயர் தென்னிந்தியாவைப் பற்றி எழுதிய பயணக் குறிப்பின் நூல் இன்றைக்கும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அதுவும் இல்லையென்றால் புதச்சேரியில் ஃப்ரெஞ்ச் நூலகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் பாதுகாப்பாக இருக்கிறது. இதுவும் தெரியவில்லையென்றால் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பொழுது நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்து பு9சு9 ஆம் ஆண்டு சட்டத்துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய சரித்திரம் தெரியாத திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் பாராளுமன்ற மேல் அவையில் பொய்யான தகவலை பதிவு செய்கிறார் என்றால் அது அவரது குற்றமாக பார்க்க முடியாது. அறிவு ஜீவிகள் கோல்லோச்ச வேண்டிய அவையில் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை மேலவை உறுப்பினராக அனுப்பி வைத்த திமுக குற்றமாக தான் பார்க்க வேண்டும்.

ஏ.பி.கே.வாசுதேவன் சட்டத்துறை சூப்பரண்டாக இருந்து அரசு இதழில் கையெப்பம் இட்டு வெளியிட்டுள்ளார். இன்றைக்கும் வன்னியர் குல சத்திரியர்கள் என்பது தான் வன்னியர்களின் கல்வி சான்றிதழ்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அரசு அலுவலக கோப்புகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வன்னியர் குல சத்திரியர்கள் என்றும், கர்நாடகவில் திகளர் குல சத்திரியர்கள் என்றும், ஆந்திராவில் அக்னிகுல சத்தியர்கள், என்றும், கேரளாவில் சம்பு-குல சத்தியர்கள் என்றும் இந்தியாவில் தென்பகுதியில் குறிப்பாக தென்னாட்டில் சத்திரியர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள் என்பது டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை அல்லது தெரிந்தும் உண்மையை மறைத்து நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலை பதிவு செய்திருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது வன்னியர்கள் கொதித்தெழுந்துப் போய் எதற்காக திமுகவுக்கு வாக்களித்து வன்னியர்கள் வசிக்கும் மாவட்டந்தோறும் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்பி வைத்தோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த செய்தி டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் சொந்த செய்தியாக பாராளுமன்றத்தில் எடுத்து வைத்தாரா? அல்லது திமுக குரலாக ஒலித்தாரா என்பதை திமுகவின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். தென்னிந்தியாவில் சத்திரியர்கள் வசிப்பதும், குறிப்பாக தமிழ்நாட்டில் சு கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் இவர்களுக்கு சு0 சதவிகித இடஒதுக்கீட்டை மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற ஒன்றை உருவாக்கி பு07 சாதிகளை உள்ளடக்கி இடஒதுக்கீட்டில் ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தி வன்னியர்களுக்கு வழங்கி பிறைமலை கள்ளர் என்பவரை எம்.பி.சி. பட்டியலில் சேர்த்து முக்குலோத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் எம்.பி.சி கோட்டாவை பலன் அடைய செய்தவரும், அதே போல் வேட்டுவ கவுண்டர் என்பவரை எம்.பி.சி பட்டியலில் சேர்த்து கொங்குவேளாளர் கவுண்டர்களும் எம்.பி. இடஒதுக்கீட்டை பெறுகின்ற வகையிலும் கஞ்சன்ரெட்டி என்ற எம்.பி.சி பட்டியலில் இணைத்து பார்வார்டு கம்யூனிட்டை சேர்ந்தவர்களும் எம்.பி.சி இடஒதுக்கீட்டில் அனுபவிக்கின்ற அளவிற்கு பெரும் குழப்பத்தோடு வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கி வன்னிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடஒதுக்கீட்டை கிடைக்காமல் செய்தவர் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி என்ற நிலையிலும் திமுகவை வன்னியர்கள் ஆதரித்தார்கள் என்பது வரலாறு. இது மட்டும் அல்ல வன்னியர்களுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் பு0.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து நீதிமன்றம் சென்று அந்த இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்கு பின்னால் இருந்து இயக்கி கொண்டிருப்பதும், உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதும் வன்னியர்குல சத்தியர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தும், வாய் மூடி மௌனமாக இருப்பதினால் டி.கே.இளங்கோவன் போன்றவர்கள், வன்னியர் சமுதாயத்தை குறைத்து மதிப்பீட்டு அவமானப்படுத்துகின்ற விதத்தில் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இது குறித்து வெட்கப்பட வேண்டிய வன்னியர்கள் தலைநிமிர்ந்து நடப்பது தான் அவமானம்.

திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் செயலை கண்டிப்பதுடன் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புகிறோம்.

- வன்னியர் கூட்டமைப்பு