இலங்கை



இனப்படுகொலை நடைபெற்ற பொழுது தமிழர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள் வறுமை, பசி, பட்டினி, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு உயிரை காப்பாற்ற என்ன வழி? அகதிகளாக வெளியேறும் தமிழர்கள். விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் நடைபெற்ற போரின் போது இலங்கை தமிழர்கள் மீது பலமுறை தாக்குதல்கள் நடத்தி தமிழர்களை கூண்டோடு கொத்து கொத்தாக பு பு/சு லட்சம் தமிழர்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். சு4 மணிநேரமும் ராணுவ ரோந்து வாகனம் உயிரோடு மீஞ்சி இருந்த தமிழர்களையும் உறக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிஈழ கனவும் கரைந்து போனது. ஆனால் இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு இதயங்களிலும் நீர்பூத்த நெருப்பாக அந்த கோரிக்கை இதய துடிப்போடு கலந்துவிட்ட ஒன்றாகவே இன்றும் இருந்துக் கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடை, உள்நாட்டு உற்பத்தி இல்லாமல் போனது கடினமாக உழைக்க கூடிய தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்று புலம் பெயர்ந்து வாழவேண்டும் என்று முடிவெடுத்து இலங்கையை விட்டு வெளியேறியது போன்ற செயல்களால் இலங்கையின் பொருளாதாரம் படும் வீழ்ச்சியடைந்து கடுமையான விலைவாசி உயர்வு பெட்ரோல், டீசல் உள்பட தண்ணீருக்கும் பாலுக்கும் அல்லல்படுகின்ற ஒரு நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதுமட்டுமல்ல இலங்கை சிங்களவர்களும் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது எப்படி இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தெரிந்து கொள்ளாத நிலையில் அதிபர் கொத்தப்பய ராஜபக்சே மற்றும் பஷீர்ராஜபக்சே போன்றவர்கள் ஆட்சி நடுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களில் சிக்கி தவிக்கிறது இலங்கை அரசும் மக்களும். சமீபத்தில் 7500 கோடி ரூபாயை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. கூடவே இந்திய தொழில் அதிபர் அதானி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்து அங்கு தொழில் தொடங்குவதற்கான நடைமுறையையும் மேற்கொண்டது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது. ஆனால் இதனால் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுமா என்றால் அதற்கு சரியான பதில் எந்த திசையில் இருந்தும் எழவில்லை. இன்னொருபுறம் இலங்கையின் சீன அரசு ஏராளமான முதலீடுகளை செய்து கோடிக்கணக்கில் இலங்கை அரசுக்கு கடன் கொடுத்து துறைமுகங்களை கைப்பற்றும் அளவிற்கு சென்று கொண்டிருந்தது. அதை தடுப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் யாரும் முன்வராத நிலையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இலங்கை அரசு அடிப்பணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தான் இலங்கை தற்பொழுது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எந்நேரமும் நாடு தீவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதினால் இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையை விட்டு அகதிகளாக வெளியேறுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அகதிகள் வருகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தாலும் இனிமேலும் தமிழகத்திற்கு வரும் அகதிகளை எவ்வாறு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு நாட்டின் கலவரம் ஏற்படுவதற்கும் திருட்டு, கொள்ளை போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவதற்கும் அந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

இந்தியாவில் விலைவாசி வீண்ணை முட்டிக் கொண்டு உயர்ந்து வரும் நிலையில் குறிப்பாக தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக குடியேறுவது அவர்களுக்கு எத்தகைய நன்மையை பயக்கும் என்பதை நினைத்து பார்க்க இயலவில்லை. உடடியாக இந்திய அரசும் தமிழக அரசும் இணைந்து இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தையும் பசி, பட்டினியில் இருந்து அவர்களை காப்பாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே ஒரு இனம் உயிர்வாழ முடியும் என்பதை நினைத்து பார்க்க வேண்டிய தருணம் இது.

டெல்லிகுருஜி