இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க
ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு


   


சென்னை:

தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்

* வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.

* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி.

* நெல்லுக்குப் பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட ரூ.10 கோடி நிதி.

* மானியத்தில் வேளாண் கருவி வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் விவசாயிகள் மீண்டும் விவசாயம் செய்ய, 154 கோடி ரூபாய் இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க நிதி ஒதுக்கீடு.

* பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

* மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி ஒதுக்கீடு.

* 2020-21-ம் ஆண்டில் 9.26 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

* 2021-22-ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது. 4.86 ஆயிரம் ஏக்கர் முந்தைய ஆண்டை விட அதிகமாகும்.

* குறுவை சாகுபடியால் டெல்டா விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. இது 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனை.

* காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

* முதல் வேளாண்மை பட்ஜெட்டின் 86 அறிவுப்புகளுக்கு 80-க்கு அரசாணை வெளியிடப்பட்டது.