திமுகவில்
மேயர்- துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி...!






நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெற்றிப்பெற்றதற்கான கடிதத்தை காண்பித்து வாழ்த்து பெற்று வருகிறார்கள் இரண்டு நாட்களாக அறிவாலயத்தில் அலைமோதும் கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி பகுதியில் வெற்றிப்பெற்றவர்கள் தற்பொழுது மேயர், மற்றும் துணை மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் நகர்மன்ற தலைவர் பதவிக்கும், துணை தலைவர் பதவிக்கும், பேரூராட்சியில் வெற்றிப் பெற்றவர்கள் தலைவர், துணை தலைவர் யார் தேர்வாகப் போகிறார்கள் திமுகவினர் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் கட்சியின் தலைமை மாநகராட்சிக்கு மேயர், துணை மேயர் தேர்வு செய்வதில் ஆலோசித்து வருகிறது. மாவட்டங்களில் மாவட்ட அமைச்சர்களும், மாவட்ட அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட வாரியாக தலைவர் துணை தலைவர் பதவிகளை தேர்வு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில இடங்களில் சுலபமாக நாங்கள் தேர்தலில் வெற்றிப் பெற்று விட்டோம் மக்கள் ஆதரவுடன் ஆனால் தலைவர், துணை தலைவர் பதவி தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுவதாக கூறிவருகிறார்கள். 

வரும் மார்ச் 4 ஆம் தேதிக்குள் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தேர்வாகி பதவியேற்று கொள்வார்கள். இதற்குள் வெற்றிப் பெற்றவர்களும் யார் எந்த பதவியை பிடிக்க போகிறோம் என்று பந்தயம் கட்டும் பணியில் இறங்கிவிட்டார்கள். சபாஷ் சரியான போட்டி.  

- டெல்லிகுருஜி