குடியரசுவிழா அணிவகுப்பில்
தமிழக ஊர்தி புறக்கணிப்பு!

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் குடியரசு தினவிழா அணிவகுப்பில் எந்தெந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கலாம் என்பதை தேர்வு செய்கின்ற குழு செயல்பட்டு வருகின்றது. அந்த குழுவினர் தேர்வு செய்கின்ற மாநில அரசுகளின் சார்பில் மட்டுமே குடியரசு தினவிழா அணிவகுப்பும் வாய்ப்பை பெறும். இந்த அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்திகள் 2016-2017-2019-2020-2021ல் பங்கேற்றுள்ளன. ஆனால் 2018 இல் தமிழகம் சார்பில் ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மேற்குவங்க ஊர்திகளுக்கு 2016-2017-2019-2020-2021 அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதே போல் 2018 மேற்குவங்கத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு தமிழகம், மேற்குவங்கம், கேரளம் மாநிலங்கள் சார்பில் ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளை புறக்கணிக்கிறது என்ற பேச்சுக்கு இடமில்லை. இசை, நடனம், சிற்பம், ஓவியம் என பலதுறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவே இந்த ஊர்திகளை தேர்வு செய்கிறது. அதன்படி இந்த ஆண்டு மத்திய மாநில துறைகள் சார்பில் 54 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கொரனா வைரஸ் காரணமாக போதிய நேரம் இல்லாததினால் 21 விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியின் அடிப்படையில் நிபுணர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கும் மத்திய அரசுக்கும் மத்திய பாதுகாப்பு துறைக்கும் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதையும் மத்திய அரசு திட்டமிட்டு அலங்கார ஊர்திகளை நீக்கிவிட்டதாக போய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அரசியல் ரீதியான அணுகுமுறையை மேற்கொண்டு மக்களை திசைப் திருப்ப வேண்டாமென்றும் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் பொழுது தேவை இல்லாத குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது மாநில அரசுகள் முன்வைக்கின்றன.

தமிழகத்தில் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் “சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை தேர்ந்தெடுத்து வஉசிதம்பரனார், பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருதுசகோதரர்களின் ஓவியங்கள் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு ரத அணிவகுப்பு தேர்வாகவில்லை என்று குறை கூறுவது ஏற்படுடையது அல்ல என்று தேர்வு குழுவினர்கள் கூறினாலும் தமிழக மக்களின் உணர்வுகளையும் தேசப்பற்றையும் புண்படுத்துவதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தாலும் இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய அரசின் விளக்கத்தை கடிதம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு தமிழ்நாட்டில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மத்திய அரசு ஏற்க மறுத்த அந்த விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த அணிவகுப்பு, ரதயாத்திரை தமிழகத்தில் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- கண்ணன்