எம்.ஜி.ஆர் புகழுக்கு அவமரியாதை!
ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ் கண்டுக்கொள்ளவில்லை...!




எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை தமிழக அரசு சார்பில் கொண்டாடுகிறோம் என்று அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர் சிலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை அனுப்பி வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதே நேரம் தரமணியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று மேற்பார்வை செய்துள்ளார். மிக அருகில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவிக்க மறுத்தது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்துவிட்டு அரசுக்கு தலைமை தாங்கும் முதலமைச்சரே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தது கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரை அவமதிக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடைபெற்றுள்ளது என்று அதிமுகவின் மூத்த முன்னோடி தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

குறிப்பாக இது குறித்து அதிமுகவை வழிநடத்துவதாக சொல்லிக் கொண்டு தொண்டர்களை ஏமாற்றிவரும் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், துணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதுகுறித்து எந்தவித கண்டமும் தெரிவிக்காமல் அறிக்கையும் வெளியிடாமல் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்றும் எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்றும் சசிகலாவை கட்சியில் சேர்க்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு வரும் இவர்கள் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அவமானத்தைப்பற்றி எந்தவித வருத்தமும், கவலையும் கொள்ளாமல் இருப்பது இவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. சசிகலா தயவில் பதவியை பெற்று அதிகாரத்திற்கு வந்த ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று அதிமுக எம்.ஜி.ஆர் விசுவாசிகள் கூறுகிறார்கள். 

மேலும் ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ் உள்பட முன்னாள் அமைச்சர்கள் தங்கள் பதவியையும் பதவியால் சம்பாதித்த சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரை பற்றி கவலைப்படாமல் ஆளுாங்கட்சியான திமுக முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அரசியல் செய்யவும் பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை என்கிறார் எம்.ஜி.ஆருடன் மிக நெருங்கிப் பழகிய மூத்த தலைவரும் அவர் அமைச்சரவையில் நீண்ட நெடுங்காலம் மந்திரியாக இருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரளவிற்கு முழுக்க முழுக்க திமுகவின் ஆதரவாளர்களாக மாறிவிட்ட ஆர்.எம்.வீரப்பன் வைத்து எம்.ஜி.ஆர் பிறந்தநாள் திமுக அரசு மரியாதை செய்தது வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது என்று அறிக்கை விடுகிறார்கள். இதுமட்டுமல்ல எம்.ஜி.ஆரால் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களான பலரும் எம்.ஜி.ஆர் பெயரை சொல்லி தொழிலபதிர்களான பெரும் பணக்காரர்களும் எம்.ஜி.ஆரை மறந்துவிட்டு அவரது புகழுக்கு கலளங்கம் ஏற்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது எங்கே எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால் திமுகவும், திமுக அரசும் தங்களை எதிரியாக பார்ப்பார்கள் என்று பயந்த நடுங்கும் சிலரும் இன்னும் தமிழ்நாட்டில் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து எம்.ஜி.ஆர் புகழை உயர்த்திப் பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் நினைக்கின்ற அப்பாவி தொண்டர்கள் இன்னும் எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.ஆர் புகழையும் பாதுகாத்துக் கொண்டு எக்காரணம் கொண்டும் திமுகவிற்கு ஆதரவான நிலையை மேற்கொண்டு அந்த கட்சியை தாங்களை இணைத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்கள் என்பது அதிமுகவிற்கு மிகப் பெரிய பலமாக உள்ளது. ஆனால் அதிமுகவை வழிநடத்திக் கொள்வதாக சொல்லிக் கொள்பவர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம் மட்டுமல்ல கடும் கண்டத்துக்குரியது என்கிறார்கள்.

நல்லவேளை தன்னை கட்சியில் சேர்க்கமாட்டோம் என்று கூறிவருகின்ற ஒ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும், தனது எதிரியாக கருதாமல் தனது உடல்நலத்தையும் கொரனா காலத்தில் தனது உடல் நலனையும் பார்க்காமல் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அவரது புகழை உயர்த்திப் பிடிப்போம் என்று சூலுரைத்து மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை கொண்டுவருவேன் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் சசிகலா இது வரவேற்க தக்கது.

- டெல்லிகுருஜி