சசிகலாவின் திட்டத்தை முறியடித்தது
அதிமுக செயற்குழு கூட்டம்!
ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ்-க்கு கூடுதல் அதிகாரம்!!       அதிமுகவின் செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாக கூடியது. கூட்டத்தில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பிரச்சனைகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் சசிகலாவைப் கட்சியில் சேர்க்கவேண்டும் என்று பேசியதாலேயே அன்வர்ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் வகையில் கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் என்பவரை நியமித்துள்ளார்கள். கட்சியின் சட்டதிட்ட விதிகளை திருத்தம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமிக்கும் ஒ.பன்னீர்செல்வத்துக்கும் இருவருக்கும் சமமான அதிகாரம் வழங்கும் வகையில் கட்சியின் சட்ட விதியில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியின் அதிகார மையமாக ஒபிஎஸ்., ஈபிஎஸ் இருவரும் செயல்படுவார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


ஒ.பன்னீர்செல்வம், செல்லூர்ராஜ், உதயகுமார், ராஜன்செல்லப்பா, ஓ.எஸ்.மணியன் போன்றவர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கக்பட்ட நிலையில் ஒருவர் கூட எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் கட்சியை பலப்படுத்துவது பற்றி கட்சி தலைமை ஒரு முடிவை எடுத்து அறிவித்தப் பொழுது அதனை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டார்கள். சசிகலாவை கட்சியில் சேர்க்கும் எண்ணம் அறவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதை அதிமுக தொண்டர்களும், தலைவர்களும் ஒருமனதாக வரவேற்று மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பது செயற்குழு கூட்டம் முடிவில் தெளிவாக தெரிகிறது. வெகு விரைவில் செயற்குழு கூட்டம் முடிவை அங்கீகாரம் வழங்கி அதை ஏற்றுக்கொள்வார்கள். பிறகு கட்சியின் தேர்தல் நடைபெறும் பொழுது சிறு சலசலப்பு ஏற்பட்டாலும் எடப்பாடி பழனிசாமியின் கை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. 


இன்னொருபு-றம் ஒ.பன்னீர்செல்வம் கட்சியில் உள்ள தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதோடு தனது ஆதரவாளர்களுக்கும் எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க கூடிய அளவிற்கு தன்னை தக்கவைத்து கொண்டுள்ளார். சாதி ரீதியாக தேவர் (கொங்குவேளாளர்)  பிளவுப்பட இருந்த அதிமுக அதிலிருந்து தப்பிவிட்டது. மீண்டும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் ஃபார்முலாப்படி கட்சியை வழிநடத்துவதற்கு ஏற்றார்போல் எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர்செல்வமும் மற்றும் மூத்த நிர்வாகிகளும் ஒத்த ஒருத்துடன் ஒரேயணியாக இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகி விட்டார்கள். எனவே அதிமுக கைப்பற்றலாம் என்று எண்ணிக் கொண்டு இருந்த சசிகலா அவர்களின் திட்டம் பொதுச்செயலாளர் என்ற பதவி இரண்டும் இனி நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. வருகிற 5&ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் வருவதினால் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு ஒ.பி.எஸ்.,ஈ.பிஎஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம் தரலாம் என்று திட்டமிட்டிருந்த சசிகலாவிற்கு அதிமுகவின் செயற்குழு மிகப் பெரிய அதிர்ச்சியை வழங்கியுள்ளதாக அதிமுக வட்டார தகவல் உறுதிப்படுத்துகிறது.


-டெல்லிகுருஜி