ராமதாஸ் திட்டம் எடுபடுமா?

அதிமுகவில் இருந்து விலகிய பாமக கட்சி ஊராட்சி மன்ற தேர்தலுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டத்தை கூடி தீர்மானம் நிறைவேற்றி அந்த தீர்மானத்தின் படி கட்சியை வலுப்படுத்துவதாக மாவட்ட வாரியாக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் இதன் மூலம் அன்புமணியின் ஆதரவாளர்களை திரட்டி எதிர்வரும் நகர்மன்ற தேர்தலை சந்திக்கவும் அதனை தொடர்ந்து சு0சு4 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு ஊர் ஊராக சென்று வன்னியர்களை திரட்டி ஆதரவு திரட்டுவதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே.மணி, தொடர்வண்டி மூத்த நிர்வாகியுமான ஏ.கே.மூர்த்தி தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். வன்னியர்கள் செல்வாக்கை பெறுவதற்கு எத்தகைய வகையில் இது உதவியாக இருக்கும் என்பதை போக போக தான் பார்க்கமுடியும்.