சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்
அதிபர் ஜோ பைடன்

  தைவான் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் மற்றும் சீன அதிபரின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியது என பல்வேறு பிரச்சினைகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளது.

 இதற்கிடையே, இரு நாட்டு உயர் அதிகார்கள் செய்த ஏற்பாட்டின்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் காணொலிக் காட்சி வழியாக சந்தித்து பேசுவது என முடிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று காணொலிக் காட்சி வழியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.