சென்னை நகரை மழை நீர் சூழ்ந்துள்ளது    
இதற்கு யார் பொறுப்பு?
காரணம் என்ன?


நாடு விடுதலை பெற்று பு95சு ஆம் ஆண்டு முதல் பொதுதேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அந்த தேர்தலில் நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தந்த காங்கிரஸ் பேரியக்கம் இந்தியா முழுவதும் வெற்றிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் வெற்றிப்பெற முடியவில்லை. தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை. புதிதாக இயக்கம் தொடங்கிய உழைப்பாளர் தொழிலாளர் கட்சி மற்றும் காமன்வீல் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் சமுதாய ரீதியாக இயக்கம் கண்டு  தேர்தலை சந்தித்து ஒன்றுப்பட்ட தென்னாற்காடு மாவட்டம், ஒன்றுப்பட்ட வடஆற்காடு மாவட்டம் இரண்டிலும் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தமிழக அரசியலில் முத்திரை பதித்தது. இந்த தேர்தலில் திமுக பிரச்சார இயக்கமாக மட்டுமே இருந்தது. அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சி பு95சு&முதல் 67 வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இராராஜி, விருத்தாசலம், காமராஜர் போன்றோர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக பதவி வகித்தார்கள். அதன் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி என்பது இன்று வரை நடைபெறவில்லை. திமுக ஆட்சி பேரறிஞர் அண்ணா தலைமையிலும் அதிமுக ஆட்சி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தலைமையிலும் தமிழகத்தில் நடைபெற்றது.


இடைப்பட்ட காலங்களில் முதல்வராக கலைஞர் கருணாநிதி அவர்களும் ஜானகி ராமச்சந்திரன் அவர்களும் செல்வி ஜெயலலிதா அவர்களும், ஒ.பன்னீர்செல்வம் அவர்களும், எடப்பாடி பன்னீர்செல்வம் அவர்களும் முதலமைச்சர்களாக பதவி வகித்து உள்ளார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கொள்கை அடிப்படையில் இரண்டு இயக்கங்கள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்து வந்தள்ளது. தற்பொழுது திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது முதல்வாக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் தற்பொழுது சென்னை மாநகரம் தமிழ்நாட்டின் தலைநகரம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு இல்லங்கள் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து குடியிருப்பு வாசிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அதே நேரம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதரமாக விளங்க கூடிய ஏரிகள் செம்பரம்பாக்கம், பூண்டி நீர்த்தேக்கம், பழவேற்காடு ஏரி உள்பட பல ஏரிகள் தனது முழு கொள்ளவை பெற்று அதிக நீர் வெளியேற்றப்படுகிறது. சு0பு5 நடைபெற்ற ஒரு சம்பவம் சென்னை நகரமே வெள்ளக்காடாகி மக்கள் உயிருக்கும், உடமைக்கும் போராடி பொருள்களை இழந்து உயிருக்கு பயந்து தவித்துக் கொண்டிருந்தார்கள். மொத்தத்தில் நகரத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தண்ணீரில் மூழ்கி தள்ளாடி கொண்டிருந்தது என்றே கூறலாம்.


அந்த நிலைக்கு யார் காரணம் என்ற தகவல் தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்து இருந்தாலும், புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து இருந்தாலும் காரணம் என்னவென்று இதுவரை தெளிவாக தெரியவில்லை. ஆனால் செம்மரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் நள்ளிரவில் திறந்து விடப்பட்டது தான் இத்தகைய நிலைக்கு காரணம் மட்டும் சொல்லப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு ஐந்து ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சுமார் நான்காண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் முற்றிலும் பணம் செலவு செய்வதற்கு மட்டுமே பயன்பட்டுள்ளது. ஆனால் மக்களை பாதுகாப்பதற்காகவும், மழை நீர் வெள்ளக்காடாக மாறி சென்னை நகரம் வெள்ளத்தில் முழ்குவதில் இருந்து அதை காப்பாற்றுவதிலும் மக்கள் அச்சமின்றி வாழலாம் என்பதற்கு உத்தரவாதமின்றி  கடந்த ஆட்சியில் எத்தகைய முயற்சியும் மேற்கொள்ளவில்லை ஆட்சியாளர்களால் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 


இதற்கு உதாரணம் தான் தற்பொழுது இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை மீண்டும் சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் வெள்ளத்தில் மூழ்கி அபாயகரமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது என்பதே சாட்சி. இதற்கு யார் பொறுப்பாளராக வேண்டிய கேள்விக்கு கடந்த கால ஆட்சியாளர்கள் மட்டுமே முழு பொறுப்புக்கும் ஆளாவார்கள் என்பது பதிலாக அமையும். காரணம் சு0பு5 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த பொழுது ஏற்பட்ட நிலையை சு0சுபு ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த பொழுது முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பணம் செலவிடுவதற்காகவும் பணம் சம்பாதிக்க மட்டுமே அமைந்து விட்டது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடந்த அரசாங்கம் கடனாளியாக இருந்தது என்பது நிதிநிலை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி வகிக்கிறார். இப்பொழுது மீண்டும் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மூழ்கி கிடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அரசு நிர்வாகமும் விழித்துக் கொண்டு மக்களை பாதுகாக்கின்ற பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று முதலமைச்சரும், அமைச்சர்களும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெள்ள நீர் வடிவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய செயல் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


இன்றைய முதலமைச்சரைப் போல் கடந்த கால முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்றைக்கு எதிர்கட்சி தலைவராக இருக்கும் பொழுது நகரப் பகுதிகளில் செல்வதைப் போல் கடந்த காலங்களில் சென்னை மாநகரம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெள்ள நீர் நகரை சுற்றி வளைக்காமல் இருப்பதற்கு உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் திட்டப்பணிகளை முழுமையாக திட்டமிட்டப்படி நிறைவேற்றி செய்து முடித்திருந்தால் இன்றைக்கு சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டிருக்காது.   


பொறுப்பேற்ற 6 மாதத்திற்குள் கொரனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும் போதுமான அளவிற்கு மருந்து மாத்திரைகளை வழங்குவதற்கும் தடுப்பூசிகளை செலுத்தி மக்களை பாதுகாப்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அவரது அமைச்சர்களும், சகாக்களும் அரும்பாடுபட்டார்கள். அதற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆரம்ப கட்டத்திலேயே கனமழை பெய்து ஆறு, குளங்கள் எல்லாம் நிரம்பி வழிகிறது. அதில் ஒரு பகுதி தான் சென்னை மாநகரம். சென்னை மாநகரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து இல்லங்களில் காணமுடிகிறது. இதிலிருந்து மக்களை மீட்டெடுத்து மக்களுக்கு போதிய அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கும் உணவு பொருட்கள் தாரளமாக வழங்குவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சியும், நடவடிக்கையும் அனைவரது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது. இயற்கை சீற்றம் எத்தகைய வழிகளில் இடர்பாடுகளை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து மக்களை காப்பது தான் ஆட்சியாளர்களின் கடமை என கருதுவது. அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பது அளிப்பதும் தங்களை தாங்களே காப்பாற்றி கொள்வதும் நடைமுறையில் ஒன்றாக தான் பார்க்கவேண்டும். குறிப்பாக இனி வரும் காலங்களில் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிறுப்புகள், வணிக வளாகங்கள், போன்ற கட்டுமான தொழில்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதுடன் போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கி நகர்ப்புறத்தை விரிவாக்கம் செய்யவேண்டுமே தவிர நகருத்துக்குள் இன்னொரு நகரம் உருவாக்குவதை அரசு திட்டவட்டமாக தடை செய்யவேண்டுமே தவிர ஊக்கப்படுத்தக் கூடாது. அப்படி இருந்தால் மட்டுமே இயற்கை சீற்றத்தில் இருந்து நகரத்தையும், நகரத்தில் வாழும் மக்களையும் பாதுகாக்க முடியும் என்பதை இந்த தருணம் நமக்கு உணர்த்துகிறது.


நீர் வழி தடங்களையும், தண்ணீர் தேங்கும் குளங்களையும் ஆக்கிரமிப்பு நிலங்களையும் தேடிப்பிடித்து கையாகப்படுத்துவதை விட புதிதாக நீர் வழி தடங்களையும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான குளங்களையும், நகரத்திற்கு அப்பால் அரசு புறம்போக்கு நிலங்களையும் அல்லது குறைந்த விலையில் தனியார் நிலங்களையும் அரசு கையகப்படுத்தி நீர்நிலைகளை பாதுகாத்து குடிநீர் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கும், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதற்கும் தமிழ்நாடு அரசு புதிய யுத்திகளை கையாளவேண்டும் என்று கேட்டு கொள்வது ஒன்றுதான் பிரச்சனைகளுக்கு தீர்வாக முடியும்.      


- சண்முகம் பி.எஸ்.சி., அக்ரி