தமிழ்நாட்டில் முதல்வர் அறிவிப்பு
300 கோடி நிவாரணம்!

தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்துள்ள மழை காரணமாக வெள்ளப் பாதிப்புகளில் இருந்து சேதமடைந்த விளை நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை அறிவித்ததோடு பழுதடைந்த சாலைகளை சீர்செய்வதற்கும் மொத்தம் 300 கோடி ரூபாய் உடனடி நிவாரணம் வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இன்று காலை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு அறிக்கை தயாரித்த அமைச்சரவை குழுக்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிற-கு தோராயமாக மதிப்பீடு செய்து இந்த ரூபாய் 300 கோடி முதலமைச்சர் நிவாரணப் பணிக்காக விடுவித்துள்ளார்.