வன்னியர்களின் 10.5 உள்ஒதுக்கீடு
உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!


வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் முறைப்படி சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் முழு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆளுநரின் ஒப்புதலை பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு துறைகளிலும் 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்து கல்வி வேலைவாய்ப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு 1000 கணக்கான மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதற்கிடையில் இந்த 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதை நடைமுறைப்படுத்தாமல் இடைக்கால தடை வேண்டும் என்றும் சில அமைப்புகள் நீதிமன்றத்தை நாடிய பொழுது சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு இடைக்கால தடை விதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தடைவிதிக்க நிதிமன்றம் அமைத்து புகார் தாரரின் விண்ணப்பத்தை தள்ளுப்படியும் செய்துள்ளது. மீண்டும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த பொழுது மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களையும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையிலும் கருத்தில் கொண்டு மாணவர்கள் எதிர்காலம் பாதிக்காத அளவில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதுடன் அரசு இயற்றிய சட்டம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதை நீதியரசர் குலசேகரனை தலைவராக நியமித்து  6 மாத கால அவகாசம் வழங்கியது. இதற்கிடையில் அவசர அவசரமாக உள்ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விவாதிக்கப்பட்டு இன்றைக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பை வழங்கியது.


இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சமூக நீதியில் அக்கறையோடு இருக்குமே ஆனால் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை ஆணை பெறவேண்டும். மேலும் இருநபர் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் மூன்று நபர் அடங்கிய பென்சுக்கு வழக்கை கொண்டு செல்ல வேண்டும். சு0 சதவிகித இடஒதுக்கீட்டில் எந்த எந்த சாதியை சேர்ந்தவர்கள் எவ்வளவு சலுகைகளை அனுபவித்தார்கள் என்ற பட்டியலையும் அரசு தயாரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கணக்கீட்டு 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடு, உள்இடஒதுக்கீடு வழங்கியதை பிற்படுத்தப்பட்ட நல கமிஷனர் ஆணையர் நீதியரசர் ஜனார்த்தனன் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை ஏற்பதற்கு முன்பாகவும் மறுப்பதற்கும் உள்ள முகாந்தரித்தை நன்கு ஆராயவேண்டும். இந்த இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருக்கும் பொழுதே சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடைபெறுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்யவேண்டும். சமூக நிதியை முன்னிலைப்படுத்தி நடைபெறும் இந்த அரசு உண்மையானால் முஸ்லீம்களுக்கும், அருந்ததியர்களுக்கும் வழங்கிய உள்ஒதுக்கீடு செல்லுபடியாகும் பட்சத்தில் வன்னியர்களுக்கு வழங்கிய செல்லாது என்று எப்படி கூற முடியும் என்ற கேள்வி எழுகிறது. 


இந்த சட்டம் செல்லுபடியாகாது என்றால் பல ஆண்டுகாலம் பலமாக பாதிக்கப்பட்டு பல உயிர்களை பலிகொடுத்து போராட்டம் நடத்தி பெற்ற இந்த இடஒதுக்கீடு என்பது சமூக நீதி அடிப்படையில் பார்த்தால் ஒரு சாதிக்கு அநீதியாகவே பார்க்கப்படும். அரசியல் ஆச்சரியங்களை மறந்து சாதி, மொழி இவைகளை கடந்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் இந்த 10.5 சதவிகிதம் வன்னியர் உள்ஒதுக்கீட்டுற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று மாநில அரசு தடை ஆணை பெற்று உத்தரவாதம் அளிக்கவேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படியும் மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிந்துரைப்படியும் இடஒதுக்கிட்டு கொள்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இருக்கும் பொழுது உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பு அதிர்ச்சியும் ஆச்சர்யத்தையும் தருகிறது.    


- டெல்லிகுருஜி