பிரதமர் மோடி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து - ரஜினிகாந்த் மகிழ்ச்சி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து -
மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார்.
திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தாதாசாகேப் பால்கே விருது பெற்றபின் பிரதமர் மோடியையும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடன் சந்திப்பு மேற்கொண்டபோது எடுத்த புகைப்படத்தையும் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடனிருந்தார்.