புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்

 புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றார்



ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின. 

என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.

பதவியேற்பு விழா

அதை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஆட்சியமைக்கும்படி ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள என்.ஆர்.ரங்கசாமி அவர்களுக்கு ‘அக்னிமலர்கள்’ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆர்.பன்னீர்செல்வம்
ஆசிரியர் & வெளியிட்டாளர்