என்.ரங்கசாமி புதுச்சேரி முதல்வராகிறார்

 என்.ரங்கசாமி புதுச்சேரி முதல்வராகிறார்
என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி என்.ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி அவர்களை அறிவித்து ரங்கசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதன் அடிப்படையில் என்.ஆர்.காங்கிரசுக்கு பு0 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. மேலும் என்.ஆர்.ஆசிப்பெற்ற 6 சுயேட்சைகள் வெற்றிப் பெற்றுள்ளார்கள். கூட்டணி கட்சியான பாஜக கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று புதுச்சேரியில் ஆட்சி அமைக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இடம் பெற்ற புதுவை மாநில அதிமுக 5 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களிலும் தோல்வியுற்றது. பு6 இடங்களில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 6 இடங்களை இழந்துள்ளது.

9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக கட்சி 3 இடங்களை பரிகொடுத்துள்ளது. ஆக மொத்தம் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் சுசு பேர் ஆதரவுடன் புதுச்சேரி முதல்வராக மே 7 ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பதவியேற்கிறார். 

கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நாராயணசாமி தலைமையில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியுற்று சு இடங்களில் மட்டும் வெற்றிப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக 6 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் உள்ள அமைச்சரவையில் பாஜக அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.  

தகவலை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது.  

& டெல்லிகுருஜி