புதுச்சேரி முதல்வராகிறார் ரங்கசாமி!


அக்னிமலர்கள் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்ததை போல் புதுச்சேரி அரசியலில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது. பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கு தயாராகிவிட்டார்கள். இதனால் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமை யிலான ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்து தானாகவே வரும் 22ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது கவிழ்வது உறுதியாகி விட்டது.

மேலிட பொறுப்பாளர் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் சமரசத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததால் நாராயணசாமியின் போக்கு பிடிக்காத காரணத்தால் இத்தகைய பரிதாப நிலைக்கு புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி நெடுக்கடிக்கு உள்ளாக்கி நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தானாகவே கவிழ்கிறது. அடுத்தக் கட்ட நடவடிக்கையாக ஆளுநர் பொறுப்பெற்றிருக்கும் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி ஆளுநர் துணைநிலை ஆளுநரும் ஆன தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு 22ம் தேதி வரை கால நிர்ணயம் செய்துள்ளார். எதிர்கட்சி தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தலைமையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட பட்டியலை ஆளுநரின் செயலாளரிடம் வழங்கியுள்ளார்.

தற்பொழுது வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த 4 பேர் விலகி விட்டார்கள். சுயட்சை ஒருவரும் விலக இருப்பதால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை புதுவை துணைநிலை ஆளுநர் அழைப்பு தரும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொண்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு அமையும் வாய்ப்பு வரும் 23-ந் தேதி தொடங்கலாம். ஆட்சி அமைக்கும் உரிமையை ரங்கசாமி கோர மறுத்தால் புதுச்சேரி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வரும். இருந்தாலும் தனது உரிமையை ரங்கசாமி விட்டுக்கொடுக்கக்காமல் ஆட்சி அமைப்பதற்கு உரிமைக் கோரினால் ஆளுநர் மறுக்க முடியாது. என்.ஆர்.காங்கிரஸ்க்கு வாய்ப்பு வழங்கியே தீரவேண்டும். என்.ஆர்.காங்கிரஸ்க்கு ஆதரவாக அதிமுக, பாஜக, கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான வாய்ப்பும் உருவாகலாம்.

தேர்தலை சந்திப்பதற்கு ஒரு மாதம் காலம் அவகாசம் இருப்பதினால் இரண்டு வார காலத்திற்குள் சில முக்கிய நிகழ்வுகளை என்.ஆர்.ஆர் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றுவதற்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரை தங்கள் அணிக்கு இழுப்பதற்கும் இந்த வாய்ப்பை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பயன்படுத்திக் கொள்ளலாம். புதுவை அரசியலில் கடந்த நான்கான்டு காலமாக மௌனம் காத்துக் கொண்டிருந்த ரங்கசாமிக்கு ஆதரவாக அரசியல் அலை வீசுகிறது. கூடவே அதிஷ்டமும் கால நேரமும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது. -

டெல்லிகுருஜி