வன்னியர் இடஒதுக்கீடு அதிமுகவுடன் ராமதாஸ் சமரசம்!


எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கு பாமக கட்சி முடிவு விக்கப்படாத ஒப்பந்தத்தை போட்டுள்ளது. வன்னியருக்கு 20 சதவீதம் தனி ஒதுக்கீடு என்று சங்கம் தொடங்கிய டாக்டர் ராமதாஸ் 15 சதவீதம், 13 சதவீதம், 10.5 சதவீதம் என்று அரசாங்கத்திடம் முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக தன் கட்சி கட்சி சார்பில் நிர்வாகிகளை அனுப்பி வைத்து தங்கமணி இல்லத்தில் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தினார். இறுதியாக முதல்வரை டாக்டர் ராமதாஸ் சந்திக்க போகிறார் என்ற செய்தியையும் வெளியிட்டார்கள். ஆனால் சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இதற்கு இடையில் சட்டமன்ற தேர்தல் முன்பாக தனி உள் ஒதுக்கீடு அறிவித்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் பாமக கட்சி இடம் பெறும் என்று பிடிவாதம் கொண்டிருந்த டாக்டர் ராமதாஸ் தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வது என்று உறுதி செய்துள்ளார்.

விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடும் தருணத்தில் இருப்பதால் அதுவரை இட ஒதுக்கீடு குறித்து பேசுவதை தவிர்த்து வரும் டாக்டர் ராமதாஸ் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்குவதாக தமிழக அரசும் முதல்வர் எடப்பாடியும் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று வன்னியர் மத்தியில் தகவல்களை பரவ விடுகின்றனர். பரப்பி விட்டு அமைதி காத்துக் வருகிறார் டாக்டர் ராமதாஸ். விரைவில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒருசில வாரங்களில் வெளியாகிவிடும். அப்படி வெளியாகும் பொழுது இட ஒதுக்கீடு குறித்து அறிவிப்பை அரசு தரப்பில் இருந்து வெளியிட இயலாது என்று தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. அந்த தடையை காரணம் காட்டி வன்னியர்களை சமாதானம்படுத்தி வன்னியர் வாக்குகளை முழுமையாக பெற்றுவிடலாம் என்று அதிமுக கழகமும் முதல்வர் எடப்பாடியும் பாமக கட்சியும் டாக்டர் ராமதாஸ் அவர்களும் கணக்குப் போட்டு அரசியல் செய்கிறார்கள். இதனை புரிந்துக் கொண்ட திமுக வன்னியர் இடஒதுக்கீடு குறித்து எந்தவித அறிவிப்பினையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து நாம் வன்னியர்களுக்கு எதிரி அல்ல தன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகிறது. இதன் மூலம் திமுகவில் உள்ள வன்னியர் வாக்குகளையும் ராமதாஸ் எதிர்ப்பு வாக்குகளையும் ஒருங்கிணைத்து அதிக வாக்குகளை பெற்று திமுக ஆட்சியை உருவாக்கலாம் என்று திமுக கணக்குப்போட்டு கச்சிதமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஆக மொத்தம் வரும் தேர்தலில் வன்னியர் பகுதிகளில் அதிக வாக்குகளை பெறுகின்ற கட்சிகளையே ஆட்சியில் அமர முடியும் என்ற நிதர்சனத்தை மனதில் வைத்துக்கொண்டு பாமக கட்சிப் பற்றி பெரிய அளவில் கவலைப்படாமல் அதிமுக திமுக தங்கள் தேர்தல் உத்திகளை வகுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆக மொத்தம் தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு என்ற அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த இடஒதுக்கீட்டு பிரச்சனைக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக நடைபெற்று அதன் மூலம் அந்த கமிஷன் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு இடஒதுக்கீட்டுக்கு தீர்வு கண்டால் ஒழிய வன்னியர் தனி இடஒதுக்கீடு என்பது கானல் நீரே. கிடைக்கும் என்பார் கிடைக்காது; நடக்கும் என்பார் நடந்து விடும் என்ற பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றது.

- டெல்லிகுருஜி