4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம்: முதல்வர் உரை


4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பேசினார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க உரிய ந்வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் 10 புதிய தொழிற் பூங்காகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது என தெரிவித்தார். பழைய ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழில் நிறுவன உற்பத்தியை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.13 கோடியில் முடிவுற்ற 13 திட்டப்பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 10 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

திருச்சி மணப்பாறை, திருவள்ளூர் மாநல்லூர், காஞ்சிபுரம் ஓரகடம் பகுதி2, தருமபுரி தடங்கல்லில் அமைக்க அடிக்கல் நாட்ப்பட்டது என கூறினார். புதுக்கோட்டை ஆலங்குடி, செங்கல்பட்டு ஆத்தூர் பகுதி2, நாமக்கல் ராசாம்பாளையத்தில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது என தெரிவித்தார். திருவண்ணாமலை பெரியகோளப்பாடி, சேலத்தில் பெரிய சீரகப்பாடி, உமையாள்புரத்திலும் தொழில் பூங்கா, சிப்காட் அமைய உள்ளது என கூறினார். மொத்தம் ரூ.33,465 கோடி மிதிப்பிலான 46 திட்டங்கள் மூலம் 2,19,714 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.