தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா முதலமைச்சர் புகழாரம்

 

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்தியவர் ஜெயலலிதா

* இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.

* சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா.

* பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தவர் ஜெயலலிதா

* தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா.

* பெண்களுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா.

* உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்தவர் ஜெயலலிதா.

* பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா *

* எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா. *

* நினைவிடத்தை கனத்த இதயத்துடன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். 

 * மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்.

* பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.