இயற்கை புயல் ஓய்ந்தப் பிறகு புதுச்சேரியில் அரசியல் புயல் மய்யம் கொண்டுள்ளது!

 


காங்கிரஸ் கூட்டணியில் நேற்று வரை இருந்த திமுக அந்த கூட்டணியில் இருந்துக் கொண்டே புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக தனது முதல்வர் வேட்பாளராகவும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராகவும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முன்னாள் மத்திய அமைச்சர் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார். 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 9 லட்சம் வாக்காளர்கள் வசிக்கிறார்கள். ஆட்சியை கைப்பற்றுவதற்கு இரண்டரை லட்சம் வாக்குகளே போதுமானது என்பதால் சுலபமாக புதுவை மாநிலத்தில் திமுக ஆட்சியை கொண்டு வருவதற்கு முடியும் என்பதால் இந்த முயற்சியில் டாக்டர் ஜெகத்ரட்சகன் ஈடுபட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு தலைமை முழு ஒத்துழைப்பு இருப்பதினால் ஜெகத்ரட்சகன் அவர்கள் முயற்சிக்கு இன்னும் சில மாதங்களில் வெற்றி கிடைக்கும் என்று புதுவை மாநில மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக திமுகவினர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஜெகத்ரட்சகன் தலைமையில் மிகப் பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தி உணர்ச்சிகரமான சிறப்புரையை ஆற்றி புதுவை மாநிலத்தில் அரசியல் உஷ்ணத்தை உருவாக்கியுள்ளார்.

ஆயிரம் கணக்கான பொதுமக்களும் திமுக தொண்டர்களும் ஜெகத்ரட்சகனுக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவருக்கு ஒரு மிகப் பெரிய அளவில் நம்பிக்கையை கொடுத்துள்ளார்கள். இதனால் தோழமை கட்சியான காங்கிரஸ் கட்சியும் அதன் முதல்வருமான நாராணசாமி அவர்களும் மகிழ்ச்சி அடைந்து உறைந்து போய் உள்ளார்கள். திமுகவின் எழுச்சியால் புதுச்சேரி மாநிலத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தோற்றுவித்துள்ளது. ஜெகத்ரட்சகனை பொறுத்தவரை எந்த துறையில் கால் பதித்தாலும் அதில் இறுதிவரை போராடி வெற்றிப்பெறும் வரை ஓயாமல் உழைத்து இலக்கை எட்டிப்பிடிப்பதில் பிரபலமானவர். கல்வித்துறையானாலும் ஓட்டல் துறையானாலும் பல்வேறுவிதமான தொழில் துறைகளில் தன்னிகரற்று விளங்கி வருபவர் ஜெகத்ரட்சகன் அரசியலில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான அளவிற்கு பொருளாதார வசதியும் தான் சார்ந்துள்ள சாதியின் ஆதரவும் கட்சியின் ஒத்துழைப்பும் புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பெறும் உதவியாக அமையும் என்றால் அது மிகையில்லை. இருந்தாலும் உணர்ச்சிகரமான தனது உரையில் ஒருசில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். ஆனால் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையுடையவர் என்பதால் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி புதுச்சேரி மாநிலத்தில் ஒரு புரட்சியை தொடங்கி வைத்துள்ளார். ஜெகத்ரட்சகன் அவர்கள் முயற்சி வெற்றிப்பெற அவருக்கு பக்கபலமாக உள்ள சில விஷயங்கள் அவருக்கு துணை நிற்கும் என்பதில் ஆச்சரியமில்லை. 

தற்பொழுது பல சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில முக்கிய அரசியல் கட்சி ஜெகத்ரட்சகன் அவர்களோடு தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருவதாக புதுச்சேரி மாநில அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு ஆதரமாக அவரது உரையிலிருந்து சிலவற்றை அக்னிமலர் வாசகர்களுக்கும் வலைதள பிரியர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் தருகின்றோம்.

புதுச்சேரியில் திமுக கூட்டணியுடன் காங்., ஆட்சி செய்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக., 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்நிலையில், விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், காங்., கூட்டணியில் இருந்து விலகி, திமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் திமுக.,வின் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக சார்பில் புதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணியை ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார். புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தவுடன் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் மாற்றம் நிகழும். புதுச்சேரியில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ஜெகத்ரட்சகன் அவர்கள் கூறினார். -

டெல்லிகுருஜி