புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது நமச்சிவாயம் முதல்வர் ஆகிறார்!


புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த நல்லாடி கிருஷ்ணராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பாஜக கட்சியில் இணைவதற்கான ஏற்பாட்டினை செய்துவரும் அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் ஆட்சி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு பாஜக கட்சியில் இணைந்து முதல்வர் ஆவதற்கான ஏற்பாட்டினை செய்துவருகிறார். இதற்கு ஆதரவாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சிலரும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறுகிறார்கள்.

ஒருவேளை ஆட்சி அமைப்பதற்கு போதுமான அளவு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில் விரைவில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பதற்கான அமுல்படுத்துவதற்கான ஏற்பாட்டினை துணைநிலை ஆளுநர் கிரேண்பேடி அவர்கள் மேற்கொண்டு வருகிறார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளார். ஆகவே ஆட்சி கவிழ்வது உறுதி.

- சாமி