இடஒதுக்கீடு கோரிக்கை புலிவாலை பிடித்த பாமக., சரிவை சந்திக்கிறது...

 

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு மாநிலத்தில் 20 சதவிதம் மத்திய அரசின் 2 சதவிதம் என்ற கோரிக்கையை முன்வைத்து 1980 ஆம் ஆண்டு முதல் சுமார் 40 ஆண்டு காலமாக வன்னியர் சங்கம் மற்றும் பாமக கட்சி தனது கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அரசியல் சார்பற்ற வன்னியர் சங்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு 33 ஆண்டுகள் ஆகின்றது. அதே நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பாமக கட்சிக்கு அரசியலில் பதவி கிடைத்தது. மத்திய அரசிலும் 6 அமைச்சர்கள் பதவிகளை அனுபவித்தார்கள். ஆனால் அதிமுக, திமுக, காங்கிரஸ் பாஜக கட்சி இப்படி ஒவ்வொரு கட்சிகளிலும் பெற்றார்கள். ஆனால் உயிர்நாடி கொள்கையான வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கோரிக்கையை எந்த அரசியல் கட்சி இடத்திலும் முன்வைத்து வலியுறுத்தியதில்லை.

காலத்திற்கேற்ப கூட்டணிகளை மாற்றி மாற்றி பதவிகளை பெற்றார்கள். ஆனால் வன்னியர்களுக்கு எந்தவிதமான பலனும் இவர்களால் பெற்றுதர இயலவில்லை என்ற குறைப்பாடு இன்றும் தொடர்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை முற்றிலும் பாமக கட்சியை சேர்ந்தவர்கள் இழந்து நிற்கிறார்கள். ஆனால் டாக்டர் அன்புமனி ராமதாஸ் மட்டும் தொடர்ந்து 13 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். ஆனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக கட்சிக்கு கனிசமான அளவிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மிக குறைந்த அளவு உறுப்பினர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் 5 ஆண்டு காலம் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடைபெற்ற பொழுது டாக்டர் இராமதாஸ் நினைத்திருந்தால் திமுக கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்திருக்கும்.

ஆனால் டாக்டர் ராமதாஸ் 5 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு (சிறுபான்மை) வெளியிலிருந்து ஆதரவு தெரி விப்பதாக ஆளுநர் இடத்தில் முதல் கடிதத்தை வழங்கியது. ஒரு சில வன்னியர்கள் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக்கி அழகு பார்க்க டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை என்பதை இது எடுத்து காட்டுகிறது. அதே போல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பொழுது முதல்வராக ஜெயலலிதா அவர்களை சந்திக்க தலைமை செயலகம் சென்ற பொழுது ராமதாஸ் அவர்களை பார்வையாளர்கள் அறையில் அமரவைத்து காலம் கடத்தினார் என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து பாமக கட்சி 5 ஆண்டுகாலம் விலகி இருந்தது. இதனால் வன்னியர் சமுதாய சட்டமன்ற உறுப்பினர்கள் 5 ஆண்டுகாலமாக எந்தவித பலனையும் அடையாமல் தொகுதி மக்களுக்கு எந்தவித சலுகையும் பெற்றுதர இயலாமல் தடையாக இருந்தார் டாக்டர் ராமதாஸ். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு ஆளுங்கட்சியையும் பகைத்துக் கொண்டு அதிமுகவாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்த பொழுது இரு கட்சிகளையும் பகைத்துக் கொள்வது தேர்தல் வந்தால் இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்வது டாக்டர் ராமதாஸ் அவர்களின் கடந்தகால வரலாறு.

இதனால் தமிழ்நாட்டில் பெரும் சமுதாயமாக இருந்தாலும் எந்த அரசியல் கட்சியும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. வன்னியர்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டார்கள். இன்றும் அந்த நிலை தொடர்கிறது என்றால் அது மிகையில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் இடஒதுக்கீடு குறித்தோ, உள் ஒதுக்கீடு குறித்தோ டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைப்பதில்லை. அதே நேரம் தனது உறவினர்களுக்கு பதவி பெற்று தருவதிலும் தனக்கு வேண்டிய சலுகைகளை பெறுவதிலும் கவனம் செலுத்தினாரே தவிர சமுதாய நலனில் அக்கறையுடன் நின்று போராடுவதில்லை . தற்பொழுது டாக்டர் ராமதாஸ் அவர்களால் ஒதுக்கப்பட்ட ஒரங்கட்டப்பட்ட பாமக கட்சி மற்றும் வன்னியர் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புகளிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பலர் தனித்தனி குழுக்களாக பிரிந்து தனிதனி அமைப்புகளாக உருவாக்கி டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் அவர்கள் பல்வேறு தீர்மானங்களையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றி அரசாங்கத்திடம் மனுக்களாக வழங்கும் பொழுது அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் முன்பாக பாமக கட்சி கூட்டணியில் ரிக்கையை நிறைவேற்றாமல் பார்த்துக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டிற்கு டாக்டர் ராமதாஸ் ஆளாகிறார்.

ஆனால் தற்பொழுதுள்ள அதிமுக அரசாங்கம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் கோரிக்கையை கூட்டணி இருந்த பொழுதும் நிறைவேற்ற மறுக்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உறுப்பினர்கள் நியமனத்தில் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை இன்று வரை ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் கூட்டணியில் இருந்துக் கொண்டே வன்னியர்களுக்கு 20 சதவீதம் என்ற கோரிக்கையில் இருந்து விலகி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு அரசிடம் வழங்கியும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியும் இதுவரை அந்த கோரிக்கையையும் அதிமுக அரசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்க மறுக்கிறார்கள்.

டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவியை வழங்கியவர்கள் உள் ஒதுக்கீடு பிரச்சினையை காலம் தாழ்த்துவது ஏன் கேள்வி எழுகிறது. உள் ஒதுக்கீடு விவகாரத்தில் இதுநாள் வரை கோரிக்கை வைக்காத டாக்டர் ராமதாஸ் அவர்கள் தேர்தல் நேரத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்து அதன் மூலம் மீண்டும் அதிமுக ஆட்சி வருவதற்கு தடையாக இருப்பதாக முதல்வர் எடப்பாடி மற்றும் அதிமுகவினர்கள் நினைக்கிறார்கள். இந்த நேரத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கினால் 117 சமுதாயத்தில் எதிர்ப்புகளை நாம் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் ஆளுங்கட்சிக்கு இருப்பது நியாயமானது. அதே நேரம் தன்னால் இடஒதுக்கீடு கிடைத்தது என்று கூறிக்கொள்வதற்கு டாக்டர் ராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்து விட்டால் பாமக அரசியல் எதிர்காலம் மிகப் பெரிய அளவில் கேள்விக்கு உள்ளாகும்.

உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் டாக்டர் இராமதாஸ் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கான கால நேரம் சரியானதாக இல்லை. ஆகவே புலிவாலை பிடித்த கதையாக பாமக கட்சியின் நிலை அமைந்துள்ளது. ஒருவேளை தனி உள் ஒதுக்கீடு பெறமுடியவில்லையென்றால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகின்ற நிலை உருவாகி வாய்ப்பு ஏற்படும் என்பதை நினைத்து பாமக கட்சியை சார்ந்தவர்களும், வன்னியர் சங்க பிரதிநிதிகளும் அச்சமடைந்துள்ளார்கள்.

- டெல்லிகுருஜி