மக்கள் முதல்வர் என்.ரங்கசாமியின் நிலை என்ன?


புதுச்சேரி மாநிலத்தில் கட்சி தொடங்கிய 15 நாட்களிலேயே ஆட்சியை கைப்பற்றினார் முன்னாள் முதல்வர் இன்றைய எதிர்கட்சித் தலைவர் என்.ஆர்.காங்கிரசின் நிறுவன தலைவர் என்.ரங்கசாமி. இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியின் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார். அந்த தோல்விக்கு என்னவென்று காரணம் ஆராய்ந்த பொழுது பாஜக கட்சியின் கூட்டணி தான் என்பது தெளிவாக தெரிந்துக் கொண்டார். அதன் பிறகு பலமுறை பாஜக கட்சியை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், அகில இந்திய பொறுப்பாளர்களும் ரங்கசாமி அவர்களை பாஜக கட்சி சேரும்படி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வற்புறுத்தினார்கள். ஆனாலும் ரங்கசாமி அவர்கள் பிடிகொடுக்காமல் மாநில வளர்ச்சியே தனது முக்கிய இலக்கு என்று அனைத்தையும் தவிர்த்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவரும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. காரணம் பாஜக கட்சி தங்கள் கட்சிக்கு கூடுதல் இடம் வேண்டும் என்றும் முதல்வர் பதவி தங்கள் கட்சிக்கு தான் வேண்டும் என்றும் டெல்லி தலைமை விரும்புவதாக கூறுகிறார்கள். அதே போல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாஜக கட்சி ஆசை வார்த்தை கூறி என்.ஆர்.கட்சியில் பிளவு ஏற்படுத்துகின்ற முயற்சி யிலம் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இதனால் பாஜக கட்சியை விட்டு விலகி அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கலாமா? அல்லது தனித்தே களத்தில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றலாமா? என்று கணக்கு போடுகிறார் மக்கள் முதல்வர் என்.ரங்கசாமி. இவை தவிர தற்போதைய கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி உட்பட சில சிறிய கட்சிகளும் தாங்கள் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றால் தங்களுக்கும் கூடுதலாக இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டு நிர்பந்திருக்கிறார்களா.

புதுச்சேரியில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கட்சிக்கு 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. இவை தவிர நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவருக்கு வாய்ப்பு வழங்க முடியும் தற்பொழுது உள்ள சூழலில் நியமன எம்எல்.ஏக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை நீதிமன்றம் வழங்கியிருப்பதினால் அவர்களுக்கும் அதிகாரம் இருப்பதால் குறைந்தது 18 சட்டமன்ற உறுப்பினர்களாவது இருந்தால் மட்டுமே 5 ஆண்டு காலத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு கட்சி ஆட்சியை நடத்த இயலும். இதனால் குறைந்தது 23 இடங்களுக்கு மேல் தனித்து போட்டியிட்டால் மட்டுமே என்.ஆர்.காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றிப்பெற்று தனித்து ஆட்சி அமைக்க இயலும் என்று கணக்கு போடுகிறார் மக்கள் முதல்வர் ரங்கசாமி.

ஒருவேளை பாஜக கட்சி நிர்பந்ததிற்கு ஆட்பட்டு பி.ஜே.பி கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட அனுபவம் சட்டமன்ற தேர்தலிலும் ஏற்படும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு தற்பொழுது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. ஒன்று அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மட்டும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது அல்லது அதிமுக பி.ஜேபி தவிர்த்து பாமக, சிபிஎம், சிபிஐ, திமுக கட்சிகளை இணைத்துக் கொண்டு திப்பது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தெளிவான சிந்தனையோடும், நம்பிக்கையோடும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி கொண்டிருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு வாக்கு என்பதை விட தனி மனிதனுக்கு வாக்களிப்பதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெறுவதும் கடந்த காலத்தில் நடைமுறையாக இருந்து வந்துள்ளது. அந்த சூழ்நிலையை எவ்வாறு மாற்றி அமைத்து மக்களான நலதிட்டங்களை அறிவித்து ஆட்சியை கைப்பற்றுவதற்கான புதிய வியூகங்களை வகுப்பதிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

புதுச்சேரி சிறுபான்மை அருந்ததியர்கள்சிறுபான்மை புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் தவிர்த்து சிறுபான்மை சாதிகளான முதலியார், நாடார், ரெட்டியார், நாயுடு, மீனவர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், அருந்ததியர்கள், மலையாளிகள், இப்படி பல சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வாக்கு என்பது மொத்த வாக்காளர்களின் 10 முதல் 15 சதவீதம் வாக்குகள் மட்டுமே உள்ளன. மிகப் பெருன்மையான சமுதாய அதிக வாக்கு வங்கியை கொண்ட இரண்டு பெரிய சமுதாயமான வன்னியர், கவுண்டர், மற்றும் ஆதிதிராவிடர், 

தலித், அருந்ததியர்கள் ஆகிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வாக்கு வங்கி 60 முதல் 70 சதவீதம் வரை இருக்கின்றனர். இவைகளில் ஒரு தொகுதிக்கு 20 ஆயிரம் வாக்குகள் முதல் 30 ஆயிரம் வாக்குகள் என்ற அடிப்படையில் பார்த்தால் கிட்டதட்ட 9 லட்சம் வாக்காளர்கள் புதுச்சேரி மாநிலத்தில் வாக்களிக்கும் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இவைகளில் ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்றால் 15 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாக பெற்றால் மட்டுமே ஒரு கட்சி வேட்பாளர் வெற்றிப்பெற இயலும்.

அதன்படி பார்த்தால் 17 தொகுதிக்கு 225000 வாக்குகளை பெற்றால் மட்டுமே அதிருதி பெரும்பான்மையுடன் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியும் மொத்த வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் வாக்களித்தால் 5 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவாகலாம். இதில் ஒவ்வொரு கட்சிகளின் வாக்குறுதியைப் பொறுத்து வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கலாம். அல்லது வெற்றி வாய்ப்புகளை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழக்க நேரிடலாம். ஆகவே தர்மசங்கடமான ஒரு சூழ்நிலையை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியை தோழமை கட்சிகளின் கோரிக்கையையும் எந்த வகையில் தங்கள் கட்சிக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு தேர்தலை சந்தித்தால் வெற்றிபெற இயலும் என்பதை இரவு பகலாக ஆலோசித்து வருகிறார் என்.ரங்கசாமி.

கடந்த 5 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் நாராயணசாமி ஏற்பட்டுள்ள அதிருப்தியும், துணைநிலை ஆளுநர் கிரேண்பேடி அவர்களின் செயல்களால் மாநில அரசு வருவாய் இழந்து வேலைவாய்ப்புகளை இழந்து முட்டுக்கட்டை போடுகின்ற சூழ்நிலையில் எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பது மக்கள் முன் உள்ள கேள்வியாக எழுகிறது. மேலும் கூட்டணி எவ்வாறு அமையப்போகிறது என்பது பொறுத்தும் ஆட்சி மாற்றம் காட்சி மாற்றம் புதுச்சேரியில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். -

டெல்லிகுருஜி