தமிழகத்தை மீட்போம்! ஸ்டாலின் பிரச்சாரம் தொண்டர்கள் அதிருப்தி!

தமிழகத்தை மீட்போம்!
ஸ்டாலின் பிரச்சாரம் தொண்டர்கள் அதிருப்தி!


கடந்த ஓராண்டு காலமாக திமுக தொடர்ந்து கட்சியினர்களுக்கு பல்வேறு வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு போராட்டங்களை நடத்துவதற்கு உத்தரவிட்டு வருகிறது. கொரனா காலத்திலும் மக்களை சந்தித்து நிவாரணங்களை வழங்குவது முதல் இன்று வரை தொடர்ந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட வாரியாக ஆலோசனைகளை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வரும் திமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு ஏராளமான செலவுகளை வைத்து ஆட்களை திரட்டி அரசு வீதி முறைகளுக்கு உட்பட்டு காணொலி காட்சி மூலம் கூட்டங்களை நடத்துவதற்கு படாதபாடுபடுகிறார்கள். பல மாவட்ட செயலாளர்கள் தங்கள் கைப்பணத்தை செலவு செய்து சோர்வுற்று காணப்படுகிறார்கள்.


இதுபோன்ற தொடர் போராட்டங்களும் கூட்டமும் கட்சி தலைமைக்கு சவுகரியமாக இருக்கலாம். தொண்டர்களுக்கோ, கட்சி நிர்வாகிகளுக்கோ அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது என்று புலம்புகிறார்கள். முழு சக்தியையும் தேர்தல் வருவதற்கு முன்பே பயன்படுத்திவிட்டால் தேர்தல் நேரத்தில் பணி செய்வதில் ஆர்வம் மிக குறைவாக இருக்கும். இதனால் கட்சி வெற்றித் தோல்வி கடுமையாக பாதிக்கும் என்று புலம்புகிறார்கள். இதை புரிந்துக் கொண்டு கட்சி தலைமை சிறிது ஓய்வு கொடுத்து உற்சாகப்படுத்தினால் நன்றாக பணியாற்றுவார்கள் என்று கூறுகிறார்கள் என்று கட்சி தலைமைக்கே எடுத்துக் கூறுகிறார்கள்.


கட்சி பணிகளுக்கு இடையில் வேறு எந்த சொந்த வேலையும் செய்ய முடியாமல் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள முடியாமலும் இருப்பதால் செலவுகள் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆர்வமின்மைக்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.


- டெல்லி குருஜி