அமித்ஷா உடன்படிக்கை

அமித்ஷா உடன்படிக்கை


தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி என்பதை உறுதியாக அமித்ஷா அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பாஜக கட்சியின் மாநில துணை தலைவராக உலா வரும் (அண்ணாமலை ஐ.பி.எஸ்) அதிர்ஷ்டசாலியாக உருவாக முடியும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடருவார். இதையும் தாண்டி ரஜினிகாந்த் அவர்கள் இந்த கூட்டணியை ஆதரித்தால் தொகுதி பங்கீடும், அதிகார பகிர்வும் முற்றிலும் தலைகீழாக மாறும்.


தமிழக பாஜக கட்சியை பொறுத்தவரை எத்தகை தொகுதிகள் என்பதை குறித்தும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும், கவலைப்பட தேவையில்லை. பூத் கமிட்டி அமைப்பது எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைப்பது சமுதாய ரீதியான வாக்குகளை ஒன்றிணைப்பது, போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். குருமூர்த்தி ஆலோசனை எந்த அளவிற்கு பாஜக கட்சிக்கு உதவியாக இருக்கும் கூற இயலாது என்பதையும், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வருவார் என்பதையும் நம்ப முடியாது என்று அமித்ஷா புரிந்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றனர்.