வளரும் பாமக திணறும் அதிமுக!

வளரும் பாமக திணறும் அதிமுக!


வேல் யாத்திரை திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூர் வரை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஒரு சிலர் நீதிமன்றத்திற்கும் சென்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றத்தில் கூறியது. இருந்தாலும் வேல் யாத்திரையை நடத்திய தீருவேன் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் தமிழ் மாநில பாஜக தலைவர்கள் பிடிவாதமாக யாத்திரை நடந்தே தீரும் என்று அறிவித்தார்கள். தமிழக காவல்துறையினர் ஊர்வலத்தை பங்கேற்பவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே கைது செய்தார்கள். ஆனால் மாநில தலைவர் முருகன் அவர்களை திருத்தணி வரை சென்று முருகனை தரிசித்தே சென்று தீருவேன் என்று வாகனம் மூலம் புறப்பட்டு சென்றார்.


மாநில அரசோ மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியின் மாநில தலைமையை எதிர்த்து வேல் யாத்திரைக்கு தடை என்று கூறியது. இருந்தாலும் வேல் யாத்திரையை நடத்தியே தீருவோம் என்று பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வேல் யாத்திரைக்கு அனுமதி வேண்டும் என்று கோஷமிட்டப்படி ாக கூடி தர்ணா செய்கிறார்கள். கொரனா காலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பொழுது இதுபோன்ற ஊர்வலங்களை நடைபெறுவது சட்டத்தை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் பாஜக கட்சி தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக பல வழிகளை கையாண்டு வருகிறது. அதில் வேல் யாத்திரையும் ஒன்று. எதிர்பார்த்த அளவு வேல் யாத்திரைக்கு மக்களிடம் ஆதரவு இல்லையென்றாலும் வேல் யாத்திரையின் விளம்பரம் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்ந்துவிட்டது. இது பாஜக கட்சிக்கு வளர்ச்சியாகவும், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு பிரச்சனையையும் தோற்றுவித்துள்ளது. -


டெல்லி குருஜி