பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்திய அமித்ஷா!

பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்திய அமித்ஷா!


2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர். அதே போல் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷா அவர்கள் சாலையில் நடந்து சென்று தன்னை வரவேற்க காத்திருந்த பாஜக கட்சி தொண்டர்களுக்கு சந்தித்து கை அசைத்து மகிழ்வித்தார். உற்சாகம் அடைந்த பாஜக தொண்டர்கள் பல்வேறு வேடங்களை அடைந்தும் பாஜக கட்சியின் பதாகைகளை ஏந்தியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு வரவேற்பு அளித்து மகிழ்ந்தார்கள்.


இன்று இரவு சென்னை நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் அமித்ஷா அவர்களை பல்வேறு தரப்பு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்குகிறார்கள். சாலையில் நடந்து சென்ற அமித்ஷா மீது ஒரு தொண்டன் பதாகையை வீசி ஏறிந்தார். அதனை பொருட்படுத்தாமல் தொண்டர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டே சென்ற அமித்ஷா வருகை என்பது தமிழக பாஜக கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.


- டெல்லிகுருஜி