சேலம் அதிமுகவிற்கு சிம்ம சொப்பணமாக திகழ்கிறார் செல்வகணபதி

சேலம் அதிமுகவிற்கு சிம்ம சொப்பணமாக திகழ்கிறார் செல்வகணபதி


சேலம் மேற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றிப்பெற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வரும் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி ஒரு காலத்தில் அதிமுகவில் அமைச்சராக கொடிகட்டிப் பறந்தவர். இன்றைக்கு முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி உள்பட பல முக்கிய அதிமுக பிரமுகர்கள் இவரது நிழலில் இளைப்பாறினார்கள் என்றால் அது மிகையில்லை. காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தியை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்கள் செல்வாக்கைப் பெற்ற வாழப்பாடி இராமமூர்த்தியை தோற்கடிக்க செய்தவர் இந்த செல்வகணபதி. இவர் தற்பொழுது சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுகவை வெற்றிப்பெற செய்வதற்காக பல்வேறு வழிகளில் திட்டமிட்டு திமுகவினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி தேர்தல் நேரத்தில் அதிமுகவினர்களுக்கு விலை போகாதவர்களை அடையாளம் கண்டறிந்து திமுகவின் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்பட கூடியவர்களை சாதி, மொழி, இனம் பார்க்காமல் கட்சியின் முழு நேரப் பணியாளராக பலரை நியமித்து திமுக தலைமையில் முழு நம்பிக்கையைப் பெற்று சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருவதுடன் கட்சிக்கு துரோகம் செய்பவர்களை களையெடுப்பதிலும் தயங்கமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்து வருகிறார்.


சமீபத்தில் கொளத்தூர் ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் தவசிராஜா என்பவரை நீக்கி விட்டு மிதுன்சக்கரவர்த்தி என்ற இளைஞரை பொறுப்பாளராக நியமித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதவி இழந்த நபர் தவசிராஜா, செல்வகணபதி மீது அவதூறு பரப்பும் விதத்தில் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி கட்சியினரிடம் செல்வகணபதிக்கு அவப்பெயரை உண்டாக்க முயற்சிக்கிறார்.


டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழகத்தில் பட்டம் படித்த செல்வகணபதி பல மொழிகள் பேசும் திறமை கொண்டவர். குறிப்பாக ஆங்கிலத்தில் உரையாடுவதில் புலமை பெற்றவர். இவர் அரசியலில் எதிரியை வீழ்த்தி தான் சார்ந்துள்ள இயக்கம் வெற்றிப்பெறுவதற்கு எத்தகையை முயற்சியையும் மேற்கொண்டு வெற்றியை மட்டுமே குறிக்கோளாக முன்வைத்து கடுமையாக உழைக்க கூடியவர். இவரது முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் முடிவு அதில் திமுகழகம் வெற்றிக்காக திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் வெற்றிக்காக முக்கிய பங்காற்றியவர் என்பது ஊரறிந்த விஷயம்.


ப்ளாஷ்பேக்....


2014 தேர்தலில் டாக்டர் அன்புமணி இராமதாஸ் பாமக சார்பில் தனித்து போட்டியிட்டு 468194 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மோகன் 391048 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தாமரைச்செல்வன் 180297 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இராமசுகந்தன் 15455 வாக்குப் பெற்று டெபாசிட்டை இழந்தார். அந்த கணக்குப்படி பார்த்தால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாமக வாக்குகளை கூட்டிப் பார்க்கும் பொழுது வாக்குகளின் எண்ணிக்கை 849242 ஆகும். திமுக-காங்கிரஸ் வாங்கிய ஒட்டுகளை கூட்டிப் பார்த்தால் 195652 மட்டுமே. ஆனால் செல்வகணபதி அவர்கள் பொறுப்பாளராக இருந்து தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் பணியை 2019-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக இன்னும் பல கூட்டணி கட்சிகள் இணைந்து பெற்ற வாக்குகள் 504235 சுமார் 75000 வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி தோற்கடிக்கப் பெற்றார். 574988 திமுக-காங்கிரஸ் உயர்ந்தது.


சுமார் 345007 அதிமுக, பாமக வாக்குகளை திமுக வேட்பாளருக்கு டாக்டர் செந்திலுக்கு ஆதரவாக மாற்றி திமுக வேட்பாளர் வெற்றிப் பெறுவதற்கு திட்டமிட்டு வியூகம் வகுத்து கடுமையாக உழைத்தவர் செல்வகணபதி என்பது கட்சி தலைமைக்கும் திமுகழக கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். இதனால் தான் எப்பொழுதும் ஸ்டாலின் அவரது மகன் இளைஞரணி உதயநிதி நம்பிக்கைகுரியவராகவும் திமுக மூத்த தலைவர்களில் நம்பிக்கையை பெற்றவருமான செல்வகணபதி வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதி முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சுலபமாக தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் கட்சி பணியாற்றி கொண்டிருக்கும் தருணத்தில் சிலர் செல்வகணபதிக்கு எதிராக தூண்டிவிட்டு அதற்கு பின்னால்  அதிமுக இருப்பதாக பல தரப்பில் இருந்து தகவல்கள் உலா வருகிறது. இதையெல்லாம் கடந்து சேலம் மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம் என்று பார்க்காமல் சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டை என்பதை நிருபிக்கும் வகையில் செல்வகணபதி அவர்களின் தேர்தல் பணி கணகட்சிதமாக நடைபெற்று வருகிறது என்கிறார்கள் திமுக மூத்த தலைவர்கள். அதிமுக சேர்ந்தவர்களும், குறிப்பாக வன்னியர் சமுதாய வாக்குகளை ஒன்றிணைப்பதில் செல்வகணதியை மீஞ்சிய வன்னிய தலைவர்கள் இல்லை என்பதையே கூறுகிறார்கள். இதற்கு உதாரணம் வாழப்பாடி இராமமூர்த்தி, டாக்டர் அன்புமணி தோல்வியே.


செல்வகணபதியை பொறுத்தவரை காசு பணத்திற்காகவோ, பதவிக்காகவோ தன்னுடைய நிலையை எப்பொழுதும் மாற்றிக்கொள்ள மாட்டார். திட்டமிடுவதில் திட்டமிட்டப்படி காரியம் மாற்றுவதில் செல்வகணபதிக்கு நிகர் செல்வகணபதி மட்டுமே என்பது நாடறிந்த விஷயம். இதை அறிந்ததால் தான் திமுக தலைமை செல்வகணபதி அவர்களுக்கு கட்சியில் சேர்ந்தவுடன் நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவி வழங்கி அவரை கட்சிப் பணிக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். எந்த திசையில் இருந்து எதிர்ப்பு வந்தாலும் தான் நிற்கின்ற திசையில் வெற்றி மட்டுமே வரவேண்டும் என்பதில் குறியாக நின்று எந்தவித சமரசத்திற்கும் ஆளாகாமல் தலைமைக்கு நம்பிக்கையாக இருப்பதே தனது கடமை என கருதுபவர் என்ற பெயர் இவருக்கு உண்டு .


வாழப்பாடி இராமமூர்த்தியை டாக்டர் அன்புமணி இராமதாஸ் தோற்கடித்து வெற்றிப்பெற்றவர்., இருவரையும் தோற்கடித்த இவர் எடப்பாடி பழனிசாமியையும் 2021 சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பார் என்று மார்தட்டுகிறது சேலம் மாவட்ட திமுக.


2016 எடப்பாடி தொகுதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிப்பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த தொகுதியில் 2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 25,000 வாக்குகள் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபனுக்கு கூடுதலாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


- சாமி