தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரம்

தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரம்


தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தயாரிக்க தொடங்கி விட்டார்கள். அதிமுக, திமுக இரு கட்சிகளும் தமிழ்நாட்டில் உள்ள மொத்த தொகுதியான 234 தொகுதிக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளது. கூட்டணி கட்சிகள் எவை எவை என்று முடிவானதும் எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்யப்பட்டப் பிறகு அந்த தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக் கொள்கின்ற அளவில் மொத்த தொகுதிக்கும் வேட்பாளர்களை தயாரித்து வருகிறது. அதே போல் பாஜக கட்சியும் ஒரு குறிப்பிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து ஒரு குறிப்பிட்ட தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பட்டியலை அடையாளப்படுத்தி தயாரித்து வருகின்றது.


பாமக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி எது என்று முடிவானப் பிறகு வேட்பாளர்கள் தேர்வை நடத்தி கொள்ளலாம் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை 234 தொகுதிகளுக்கும் தேர்வு செய்ய தொடங்கிவிட்டார். அநேகமாக வரும் தேர்தலில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.


இருந்தபோதிலும் அவர் அரசியல் கட்சி தொடங்கும் ஆர்வம் மிகவும் குறைந்து வருவதாக உள்ள நிலையில் கட்சியை தொடங்கமாட்டார் என்ற முடிவுக்கு பல அரசியல் கட்சிகள் முடிவுக்கு வந்துள்ளது. எனவே தமிழக அரசியலில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டியா? மூன்று அணிகள் மோதும் போட்டியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக, திமுக இரண்டு அணிகள் உறுதியாக தங்கள் கருத்தக்கு ஒத்துவருகின்ற தங்களுடைய உடன்படிக்கையை ஏற்றுக்கொள்கிற தோழமை கட்சிகளை இணைத்துக் கொண்டு இரு அணிகளும் தேர்தலை சந்திக்கும். ஒருசில கட்சிகள் கூட்டணியை விட்டு விலகி மூன்றாவது அணியா, நான்காவது அணியா என்று ஆருடம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.


அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு குழுக்கள் அமைத்து விட்டன. திமுக ஏற்கனவே அறிக்கை தயாரிக்கும் குழுவுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது. அதிமுக 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவையும் நியமித்து விட்டது. ஆகவே 2020-21 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தமிழகத்தில் வேகமாக நடைபெற்று வருகின்றது. இதன் இறுதி வடிவம் ஜனவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியாகலாம்.


- பெத