வன்னியர் தனி இடஒதுக்கீட்டிற்கு டாக்டர் ராமதாஸ் முட்டுக்கட்டையா?
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் முதல் முக்கிய கொள்கை வன்னியர்களுக்கு அரசு கல்வி வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு என்பது தான் அந்த தனி இடஒதுக்கீடு என்பது கோரிக்கையை சில ஆண்டு காலம் தீவிரமாக பேசிவந்த டாக்டர் ராமதாஸ் கடந்த 20 ஆண்டுகளாக இடஒதுக்கீடு குறித்தோ வன்னியர்கள் கோரிக்கை குறித்தோ பொது இடங்களில் பேசுவதில்லை, ஊடகங்களில் விவாதிப்பதில்லை. தேவைப்படும் பொழுது இடஒதுக்கீடு குறித்தும் வன்னியர்கள் குறித்தும், அவ்வவ்பொழுது ஒரு சில வார்த்தைகள் பேசுவது வழக்கம். இந்த நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு வன்னிய சங்கங்கள் அரசின் முன்வைத்து சட்ட ரீதியாகவும் கோரிக்கையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தினை எடுத்து வருகின்றன. மேலும் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் மூலம் பணி இட ஒதுக்கீட்டை பெற்றே தீரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் கொடுத்து வரும் வேளையில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஈடுபட்டு வருவதாக பல்வேறு வன்னிய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதற்கு ஆதாரமாக சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஒரு கடிதத்தினை முதல்வர் அவர்களிடம் கொடுத்து தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு என்பதை அறி விப்பதில் சாத்தியம் இல்லை என்பது போல் தனது விருப்பத்தினை தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கோரிக்கை மனுவை டாக்டர் ராமதாஸ் அவர்கள் வழங்கியுள்ளார்கள். இந்த கடிதத்தை மீறி சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைப் படி தனி உள் ஒதுக்கீடு வழங்குவாரா அல்லது டாக்டர் ராமதாஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதிமுக கூட்டணியில் பா.ம.கவை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக வன்னியர்களின் இடஒதுக்கீட்டு கோரிக்யை கிடப்பில் போடுவாரா? என்ற கேள்வியை எழுப்பும் வன்னியர் கூட்டமைப்பை சார்ந்த பல அமைப்புகள் தமிழக அரசிடம் கேள்வியை வைக்கிறார்கள்.
ஒருவேளை திமுக தனது தேர்தல் அறிக்கையை ஏற்கனவே கூறி உள்ளப்படி திமுக ஆட்சி வந்தால் வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவோம் என்ற அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் திமுக வெளியிட்டால் திமுக ஆட்சி அமைப்பதற்காக 2021 தேர்தலில் வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் பல்வேறு வன்னியர் சங்க கூட்டமைப்புகள் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள். இது டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் அரசியலில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.