மாணவர்களுக்கு மகிழ்ச்சி எடப்பாடிக்கு பாராட்டு!

மாணவர்களுக்கு மகிழ்ச்சி எடப்பாடிக்கு பாராட்டு!


நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார் என்ற செய்தி அரசு பள்ளி மாணவர், மாணவிகளுக்கும் அவர்களுது பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் மிகப் பெரிய பாராட்டு கிடைத்துள்ளது. காலதாமதம் ஆனால் மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகும் என்ற செய்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் காதுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால் அரசிதழில் வெளியிட்டு அடுத்த நாளே ஆளுநரின் அனுமதியும் பெற்றுவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இந்த சட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.