மாணவர்கள் வாக்கு வங்கியை தட்டிப் பறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பொறியியல் மற்றும் கலை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு திடிரென்று உயர்ந்துள்ளது. இந்த செல்வாக்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரிய அளவில் அதிமுக கட்சிக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தருகின்ற அளவில் உள்ளது. காரணம் மாணவ மாணவிகள் பல ஆண்டுகளாக தேர்வில் அரியர்ஸ் வைத்திருப்பதை ஒரே உத்தரவின் மூலம் தேர்வு எழுத தேர்வு கட்டணம் செலுத்திய மாணவ மாணவியர்களுக்கு கொரனா ஊரடங்கை காரணம் காட்டி அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பல்கலைகழக மானியக் குழு வழிகாட்டுதலில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் இதற்கு முழு முதற் காரணமாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பதை மாணவ மாணவிகள் சமூகம் கருதுகிறார்கள். பெரும்பாலும் அரசியல் கட்சியை சார்ந்த மாணவ மாணவிகளும் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுவாக மாணவ மாணவிகளும் இந்த அறிவிப்பால் பயன்பெற்றுள்ளார்கள். மாணவ மாணவிகள் மட்டும் அல்லாமல் அவர்களின் பெற்றோர்களும் இந்த அறி விப்பின் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு கிடைத்த தகுதி சான்றாக கருதுகிறார்கள்.


ஆகவே லட்சக்கணக்கான பெற்றோர்களும் தங்கள் வாக்குகளை அதிமுகவிற்கு சாதகமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள் என்கின்ற நம்பிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இப்படி ஒரு அறிவிப்பு எந்த முதல்வரும் துணிந்து முடிவெடுத்து அறிவித்ததில்லை. அந்த வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு சிறப்பாக அமைந்துவிட்டது.


மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதித்து காட்டுவார்கள். கடந்த காலத்தில் அஸ்சாம் மாநிலத்தில் மாணவர்கள் இயக்கம் பிரபலகுமார் மகந்தா தலைமையில் நீண்ட நாள் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியை கைப்பற்றியது என்பது வரலாறு. அத்தகைய வாய்ப்பு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் மாணவர்களால் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.