திமுகவின் பொதுக்குழு காணொலி காட்சி மூலம் செப்-9 ஆம் தேதி நடைபெறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு யார் யாரை தேர்வு செய்யவேண்டும் என்று முடிவு எடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. துரைமுருகன் பொதுச்செயலாளராகவும், கே.என்.நேரு அல்லது ஏ.வா.வேலு இருவரில் ஒருவர் பொருளாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் துரைமுருகன் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. கட்சியின் தலைவருக்கு அடுத்தப்படியாக பொதுச்செயலாளர் பதவி அதிகாரம் படைத்த பதவியாகும். ஆனால் தற்பொழுது பொதுச்செயலாளரின் முழு அதிகாரமும் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. ஒருவேளை அதிகாரம் இல்லாத பொதுச்செயலாளராக த நியமிக்கப்படலாம் என்கின்ற பேச்சு எழுந்துள்ளது.
அதிகாரம் இல்லாத பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் அவர்களை நியமிக்கப்பட்டு வன்னியர் வாக்குகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். இது எந்தளவிற்கு வன்னியர் வாக்குகளை பெறுவதற்கு ஸ்டாலின் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று போக போகத் தான் தெரியும். ஒருவேளை பொதுச்செயலாளர் அதிகாரம் முழுவதையும் துரைமுருகனுக்கு வழங்கப்பட்டால் திமுகவிற்கு ஒரு மிகப் பெரிய அளவில் வன்னியர் வாக்குகள் விழுவதற்கு வாய்ப்பிருக்கும்.
நேரு அவர்கள் பொருளாளராக நியமிக்கப்பட்டால் அதுவும் வன்னியர் வாக்குகளை திமுகவுக்கு பெற்று தருவதற்கு உதவிகரமாக இருக்கும். அதே நேரம் ஏ.வா.வேலு அவர்கள் பொருளாளராக நியமிக்கப்பட்டால் வன்னியர் வாக்குகளை பெறுவதில் சிரமம் ஏற்படும். காரணம் ஏ.வா.வேலு அவர்களும் விழுப்புரம் மாவட்டம் செயலாளர் பொன்முடி அவர்களும் கட்சியின் தலைமையை தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வன்னியர்களுக்கு எதிராக செயல்படுவதாக ஒருவித குற்றச்சாட்டு எழுகிறது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி தமிழ்நாட்டில் வரும் என்கின்ற நம்பிக்கை தமிழகம் முழுவதும் பேசப்படுகிறது. குறிப்பாக வன்னியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் திமுக தலைமை வன்னியர் வாக்குகளை பெறுவதற்கு எத்தகைய முயற்சியை மேற்கொள்ளப் போகிறது என்பது மிகப் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.