விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்!

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக கட்சி தொடங்கிய சில காலங்களிலேயே அதிமுக கூட்டணியில் இணைந்து ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை எதிர்கட்சியில் வரிசையில் கூட அமர முடியாம போனதற்கு விஜயகாந்த் ஒரு சக்தியாக உருவெடுத்து எதிர்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார் கேப்டன் விஜயகாந்த். இதற்கு முன்னார் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிகவில் இருந்ததும் ஒரு காரணம். அதன் பிறகு அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தனது சொந்த செலவில் கட்சியை நிலைநாட்டிக் கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்து படுதோல்வியை சந்தித்தார். போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெற முடியவில்லை. இதற்கு முன் 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட விஜயகாந்த் அப்பொழுது ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறாமல் படுதோல்வியை சந்தித்தார்.


இதற்குப் பிறகு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் சிகிச்சைப் பெற்று வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது மனைவி பிரேமலதாவிடம் கட்சிப் பொறுப்பை ஒப்படைத்து தன் ஆதரவு தொண்டர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தேமுதிக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது அரசியல் வட்டாரத்தில்.


சமீபத்தில் இராமேஸ்வரத்திற்கு வந்த விஜயகாந்த் தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் தான் பூரண நலம் பெறவேண்டியும் சிறப்பு பூஜைகள் நடத்தினார். சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவர்களை நேருக்கு நேர் கேள்வி எழுப்பி அதிர்ச்சி வைத்தியம் தந்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருக்கா இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று இராமேஸ்வரம் மக்கள் பரிதாபமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள்.