முதல்வர் எடப்பாடியாரை திடுக்கிடச் செய்தார் அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர் மாவட்டம் சுற்றுப்பயணத்தில் முதல்வர் எடப்பாடி சென்ற பொழுது அவரை வரவேற்பதாகவோ, வழியனுப்புவதற்காக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முதல்வரின் காரின் முன்பக்க டயரில் தொட்டு கும்பிட முயற்சித்தப் பொழுது அதிர்ச்சியடைந்து திடுக்கிட்ட முதல்வர் தடுப்பதற்கு முயற்சி செய்தார். கரணம் தப்பினால் மரணம் என்பதை போல் இன்னும் சற்று துணிந்து இருப்பாரே ஆனால் அமைச்சரின் கரங்கள் டயரில் சிக்கி அபாயம் ஏற்பட்டிருக்கும் அந்தளவிற்கு குனிந்து காரின் டயரை தொட்டு கும்பிட்டுள்ளார் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத். இந்த செயல் அடுத்த இரண்டு நிமிடங்களில் வாட்ஸ்அ ப் மூலம் பத்திரிகையாளர் மூலம் உலகம் முழுவதும் பரபரப்பப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.


குறிப்பாக கடலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்றதொரு நிகழ்ச்சி ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மனுதாக்கல் செய்த பொழுது ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் அவர்களின் டயரை தொட்டு வணங்கினார். அந்த நேரத்தில் அது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு இப்பொழுது அமைச்சர் எம்.சி.சம்பத் இத்தகைய செயலில் ஈடுபட்டு இருப்பது முதலமைச்சருக்கே சற்று நெளிவையும் சங்கடத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக கோட்டை வட்டார தகவல் கூறுகின்றது.