திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 10% வாக்கு கூடியது ஸ்டாலின் ராஜதந்திரம்

திமுகவின் உயர்பதவியான பொதுச்செயலாளர் பதவி பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் பெரும் தலைவர்கள் வகித்த பொதுச்செயலாளர் பதவி துரைமுருகன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பதவி இவருக்கு வழங்கப்பட்டிருப்பதால் தனிப்பெரும் சமுதாயமாக விளங்கும் வாக்கு வங்கியை கொண்ட ஒரு சமுதாயம் என்பதால் சுமார் 10% வாக்குகள் திமுக கூட்டணிக்கு தேர்தல் காலங்களில் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 1% வாக்குகள் குறைந்ததினால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் எதிர்கட்சியில் அமர வேண்டிய வாய்ப்பு திமுகவிற்கு கிடைத்தது. தற்பொழுது அந்த நிலை மாறி 10% வாக்கு (வன்னியர்) கூடுதலாக வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும். இதனால் ஆளுங்கட்சி ஆவதற்கு அதிக இடங்களில் வெற்றிபெரும் சூழ்நிலை உருவாகும்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னியர்களுக்கு எதிராக செயல்படக் கூடியவர் என்ற ஒரு மாயை பிரச்சாரம் இந்த நியமனத்தின் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. துரைமுருகன் கட்சியின் மூத்த தலைவர் என்ற போதிலும் தன்னைவிட வயது குறைந்த மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றுக்கொண்டு கட்சிப் பணியாற்றுவதற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர் என்றாலும் அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும் தேர்தல் நெருங்கிவரும் காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் துணிந்து முடிவெடுத்திருப்பது பல இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அதிருப்தியாகவும்ம இருக்கலாம்.


அதே நேரம் இத்தகைய முடிவு என்பது எதிர்வரும் தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றுவதற்காக எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அதிருப்தியாளர்கள் அடங்கிப் போவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் உள்ளார்கள். அதே போல் கட்சியின் பொருளார் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு அவர்கள் நீண்ட நெடுங்காலமாக திமுகவில் இருந்து வருபவர். அவரது நியமனம் என்பதும் எதிர்வரும் தேர்தலில் கருத்தில் கொண்டே எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது. காரணம் தமிழ்நாட்டில் தெற்கே தேவரும், வடக்கே வன்னியரும், இருபெரும் சமுதாயமாக கருதப்படுகிறது. மேலும் வாக்கு வங்கி சமுதாயமாகவும் இருப்பதால் இத்தகைய முடிவினை இந்த தருணத்தில் திமுக தலைமை கட்டாயமாக எடுத்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.


பொதுவாக சிறுபான்மை சமுதாயத்தினரும் ஆதிதிராவிடர் மக்கள், வன்னியர்கள், முதலியார்கள், நாயுடுகள், யாதவர்கள், செட்டியார்கள் மற்றும் நாடார்கள் உள்ளடக்கிய சாதி, மதம், மொழி அனைத்தும் கடந்த ஒரு பொது இயக்கமாக தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இயக்கம் திமுக கழகம். இருந்த போதிலும் இதுபோன்ற நியமனங்கள் தான் எதிர்காலத்திற்கு வெற்றியை ஈட்டி தரும் என்பதற்கு அடையாளமாக பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களும் நியமிக்கப்பட்டிருப்பது ஒரு மாபெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இலக்கை அடைவார் என்பது உறுதி.


- சாமி