புதுச்சேரியில் உற்சாகத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் உற்சாகம் இழந்த காங்கிரஸ் ஆட்சி

புதுச்சேரியில் உற்சாகத்துடன் என்.ஆர்.காங்கிரஸ்
உற்சாகம் இழந்த காங்கிரஸ் ஆட்சி


 புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கடந்த 4 ஆண்டுகளாக நிர்வாக திறனற்று அதன் செயல்பாடுகள் மக்களுக்கு சென்றடையாமலேயே சென்று கொண்டிருக்கிறது. முதல்வர் நாராயணசாமி நடவடிக்கைகள் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அதிக நேரம் செலவிடுவதை விட தனது பதவியை காப்பாற்றி கொள்வதிலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களோடு எழுகின்ற மோதல் பிரச்சனைகளிலும் தனது ஆட்சியின் முழு நேரத்தையும் செலவு செய்து வருகிறார்.


சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெயரில் மதிய உணவு திட்டத்தை அறிவித்து காங்கிரஸ் காரர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், பகையையும் சம்பாதித்துக் கொண்டார் முதல்வர் நாராயணசாமி. இதை சற்றும் எதிர்பாராத தோழமை கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் சபையில் இருந்து வெளிநடப்பே செய்துவிட்டன. இன்னும் 8 மாதங்கள் மட்டுமே ஆட்சியின் ஆயுட் காலம் இருப்பதினால் ஆட்சியை கவிழ்ப்பதில் யாருக்கும் விருப்பம் இல்லை. இதனால் முதல்வராக நாராயணசாமி தொடர்கிறார்.


காங்கிரஸ் கட்சி தேர்தலில் அறிவித்துள்ள வாக்குறுதியின்படி எந்தவொரு நலத்திட்டத்தையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளப்படி எதையுமே நிறைவேற்றாமலேயே நான்காண்டுகளை கடந்து விட்டது நாராயணசாமியின் அரசு. இதனால் புதுச்சேரி மாநில மக்கள் கடுமையான அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதுடன் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறியவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். என்.ஆர்.காங்கிரஸ் நிறுவன தலைவரும் எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி அவர்கள் நினைத்திருந்தால் நாராயணசாமி ஆட்சியை எப்பொழுதோ கவிழ்த்திருக்க முடியும். அந்த முயற்சி அவர் ஈடுபடவிரும்பவில்லை .


காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியை தெரிவித்த பொழுதும் ஆட்சி கவிழுப்பிலிருந்து புதுச்சேரி அரசு தப்பியுள்ளது. காரணம் ரங்கசாமி அவர்களின் மௌனம். முதல்வர் நாராயணசாமிக்கு எதிரான அலை அவரது அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள நிலையில் பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அவர்களது பதவியின் பறிப்பு என்பது புதுச்சேரி மக்களிடத்தில் தனவேல் அவர்களின் பதவியை பறித்தது. புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி மீது இருந்த அதிருப்தி மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் 2021 தேர்தல் வந்தால் என்.ஆர்.காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது.