ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் சச்சின் பைலட் ராகுலுடன் சமாதானம்

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் சச்சின் பைலட் ராகுலுடன் சமாதானம்


ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக பரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் அசோக் கிலேட் ஆட்சி ா என்ற கேள்விக்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்த துணை முதல்வரும், ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி தலைவருமான சச்சின் பைலட் அதிரடியாக கட்சி தலைவர் பதவியில் இருந்தும், துணைமுதல்வர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனிடையில் நீதிமன்றத்தை நாடி தனது நியாயமான கோரிக்கையை மேல்முறையீடு செய்து தனது ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பை பெற்று தந்தார் சச்சின் பைலட். இதனை அறிந்த சட்டப்பேரவை தலைவர் தனது நோட்டீஸை வாபஸ் பெற்றார்.


ஆட்சியை அமைப்பதற்கும் பொதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவையும் இருப்பதாக கூறி முதல்வர் அசோக் கிலேட் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் சட்டமன்றத்தை கூட்ட இயலாது என்று கூறிவிட்டார் ஆளுநர். இதனால் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மாநில முதல்வர் அசோக் கில்லட் முயற்சி எதுவும் பலிக்கவில்லை . அதே நேரத்தில் சச்சின் பைலட் அவர்களும் அவரது ஆதரவுவாளர்களும் எதிர்ப்பு நிலையில் இருந்து பின்வாங்காமல் உறுதியோடு நின்றனர். இதனை கூர்ந்து கவனித்து வந்த காங்கிரஸ் டெல்லி மேலிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கு படாதப்பாடு பட்டுக் கொண்டிருந்தது. அதில் ஓர் கட்டம் சச்சின் பைலட் அவர்களுடன் சமாதானம் செய்து கொள்வது ஒன்றே சிறந்த வழி என்று முடிவுக்கு வந்தது. ராகுல்காந்தி அவர்களும் பிரியங்கா காந்தி அவர்களும் இருவரும் மேற்கொண்ட முயற்சி ஓரளவுக்கு பலனை தந்தது. அதன் விளைவாக சச்சின் பைலட் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி அவர்களை நேரில் சந்தித்து தன் தரப்பின் நியாயங்களை எடுத்துரைத்தார் சச்சின் பைலட். அதை ஏற்றுக்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை சச்சின் பைலட் அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துக்கொண்டு மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதல்வர் அசோக் கில்லட்டுடன் சச்சின் பைலட் சமாதானம் செய்து கொண்டார்.


அதே நேரம் பிரச்சனைகளை குறித்து ஆராய மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் சச்சின் பைலட் ஆதரவு நிலை விஸ்வரூபம் எடுக்கும். இதனால் மீண்டும் முதல்வர் பதவியோ அல்லது துணை முதல்வர் பதவியோ சச்சின் பைலட்டுக்கு வழங்கப்படும் என்பது உறுதியாகிறது. மத்திய பிரதேசத்தில் ஜோதி ஆதித்தியா ஆட்சியை கவிழ்த்தது போல் ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின்


மத்திய பிரதேசத்தில் ஜோதி ஆதித்தியா ஆட்சியை கவிழ்த்தது போல் ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட் ஆட்சியை கவிழ்ப்பார் என்று ஊடகங்களும் அரசியல் பார்வையாளர்களும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். பாஜக கட்சியில் சச்சின் பைலட் இணையப் போகிறார் மத்திய அமைச்சராகப் போகிறார் என்றெல்லாம் கதை கட்டினார்கள். ஆனால் சச்சின் பைலட் பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை முழுமையாக பெற்றிருப்பதனால் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதில்லை என்று கூறினார். இன்று அது நிறைவேறியுள்ளது.


இளைஞர்களையும் அவர்கள் விருப்பத்தினையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே எதிர்காலம் உண்டு என்பதற்கு ஒரு உதாரணமாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் நிலைமை சீர்செய்யப்பட்டதின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சச்சின் பைலட்.


இவரது தந்தை ராஜேஷ்பைலட் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.