இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை?

இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை?


இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவும் இலங்கை தமிழர்களுக்கு பெரும் அச்சத்தையும், கலக்கத்தையும் தோற்றுவித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே குடும்ப அரசியல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி மகிழ்ந்த ராஜபக்சே பிரதமராகவும் அவரது வாரிசுகள் அமைச்சர்களாகவும் பதவியேற்று இருப்பது மிகப் பெரிய அளவில் இலங்கை தமிழர்களுக்கு கவலை அளிக்க கூடிய ஒரு விஷயமாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் எந்த நேரமும் எந்த சூழ்நிலையிலும் இலங்கை தமிழர்களை வடகிழக்கு மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படலாம் என்பது தான் அல்லது தாக்குதலுக்கு ஆளாக்கப்படலாம் என்பது தான் தமிழர்களின் நிலையாக உள்ளது.


விடுதலை புலிகளை அழித்து ஒழித்து தமிழர் பகுதிகளில் சிங்களர்களையும், சீனர்களையும் ஏற்கனவே இலங்கை அரசு குடியமர்த்தி தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் மேற்பட்ட இடங்களையும் குறிப்பாக தமிழர் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற தொகுதியினையும் ராஜபக்சே கட்சி கைப்பற்றி உள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலத்தில் இலங்கை தமிழர்கள் வசிப்பதற்கும் வாழ்வாதாரத்திற்கும் கேள்வி குறியாகி உள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்களும் இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்ற முடிவில் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைவிட கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும், விடுதலைபுலி ஆதரவாளர்களும் பல ஆண்டுகளாக இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்தவர்களும், தேர்தல் முடிவு குறித்து ஒரு சிலரை தவிர பலர் மௌனம் சாதிக்கிறார்கள்.


குறிப்பாக விடுதலைபுலிகள் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்தவர்கள் அதிக அளவில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இனி வருங்காலங்களில் ஈடுபட மாட்டார்கள் என்பதை இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது உள்ள இலங்கை ஆட்சியில் தமிழர்களின் அதிகாரம் பலமிழந்து காணப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு எதிராக குரலையும் எழுப்பப் முடியாமல் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த குரல் தேர்தல் காலத்தில் ஒரே திசையில் ஒலிக்காமல் போனதால் இத்தகைய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.


பதிமூன்றாவது அட்டவணையின்படி இந்தியா இலங்கை ஒப்பந்தம் திருத்தப்பட்டால் இலங்கை தமிழர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சீனாவின் ஆதிக்கம் இலங்கை அரசாங்கத்தில் அதிக பட்சமா கொண்டுள்ளது. இந்திய அரசாங்கமோ தங்கள் பங்கிற்கு இலங்கை அரசிற்கு பல்வேறு உதவிகளை செய்து தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்க முயற்சி செய்கிறது இருந்தாலும் சீனாவின் பக்கமே இலங்கை அரசாங்கம் சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளதால் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு குரல் எழுப்பினாலும் அது வலுவிழந்தே காணப்படும். இதுதான் இலங்கை தமிழர்களின் தற்போதைய நிலை. வாழ்வதா? சாவதா? அல்லது இலங்கையை விட்டு வெளியேறுவதா? என்பதற்கு விடை தெரியாமல் வாழ்கிறார்கள் இலங்கை தமிழர்கள்.


- சாமி