வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சீறும் அமைச்சர் சி.வி.சண்முகம்

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சீறும் அமைச்சர் சி.வி.சண்முகம்


21 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலால் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட கூடாது என்பதற்காக அவசர அவசரமாக பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக கூட்டணிக்கு அழைத்து வந்தார்கள் ெஉள்துறை அமைச்சர் வேலுமணி மூலமாக. முதல்வர் எடப்பாடியின் அனுமதியோடு நடைபெற்ற இந்த கூட்டணி என்பது எதிர்பார்த்த பலனை தரவில்லையென்றாலும் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கு போதுமான அளவு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சியால் பல தொகுதிகளில் அதிமுக தோல்வியுற்றாலும் 2001 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து பாமகவுடன் நெருக்கமான இருந்து வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வன்னியர் அமைச்சர்கள் 5 பேர் இருந்தாலும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் முதலமைச்சருக்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார். நடைமுறையில் உள்ள எதார்த்தனமான போக்கினை கையாளும் அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலம் வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பொதுசொத்து நலவாரியம் பெற்று தந்தார். அதனை தொடர்ந்து வன்னியர்களின் கோரிக்கையான உள் ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முழு முயற்சி யினை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய முயற்சி வெற்றிப்பெறுவதற்கான நேரம் நெருங்கி வருகிறது என்று அமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை விரைவில் அறிவித்துவிட்டால் (வன்னியர் தனி ஒதுக்கீடு) டாக்டர் ராமதாஸ் கோபப்பட்டு அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிடுவாரோ என்ற அச்சம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படுகிறதாம்.


விடாது கருப்பு என்பதை போல் 2021 தேர்தலில் அதிமுக வட மாவட்டங்களில் குறிப்பாக வன்னியர் பகுதிகளில் அதிகளவில் வெற்றிப்பெற வேண்டுமானால் வன்னியர்களின் கோரிக்கையான தனி உள் ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே சாத்தியமாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மற்றும் சக தோழமை அமைச்சர்களிடமும் எடுத்துரைத்து வருகிறாராம் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். அதே போல் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் உறுப்பினர்கள் நியமனமும் கடந்த 10 ஆண்டுகளாக முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை நிரப்ப படாமலேயே இருந்து வருகிறது. வழக்கமாக 2 நபர்கள் வன்னியர் தரப்பிலிருந்து தேர்வாணை குழு உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள். அந்த நியமனத்திற்கும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலம் கடத்தி வருகிறார் என்ற கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறாராம் அமைச்சர் சி.வி.சண்முகம். தேர்தல் உடன்படிக்கையின் படி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற தனது மகன் அன்புமணி ராமதாஸ்க்கு ராஜ்யசபா அதிமுக சார்பில் வழங்கப்பட்டும் டாக்டர் ராமதாஸ் இன்னும் இந்த ஆட்சியின் மீது பல நிலைகளில் தனது அதிருப்தி கருத்தினை வெளியிட்டு வருகிறாரா என்று வருத்தம் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு உள்ளதாம். இதே நிலை தொடர்ந்தால் வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமக கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் பாமக இடம் பெறாமல் போய்விடுமோ என்கின்ற கவலையும் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளதாம்.


இத்தகைய சூழலை வந்தாலும் அதை சமாளிப்பதற்காக புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவிகளில் வன்னியர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து மாவட்ட செயலாளர்களாக நியமித்துள்ளார்களாம். ஆகவே சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ராமதாஸிற்கு இந்த ஆட்சியில் வழங்கப்படும் முக்கியத்துவம் அவசியமற்றது என்றும் இராமதாசால் கிடைக்கின்ற வன்னியர் வாக்குகளை முழுமையாக பெற்று தருவதற்கு ஏற்றார்போல் பல்வேறு வன்னியர் சங்க தலைவர்களின் ஆதரவை பெற்று அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை தேடித்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.


சமீபத்தில் மயிலாடுதுறையில் தியாகி நாகப்ப படையாட்சிக்கு சிலை நிறுவ இருப்பதை தடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் முயற்சி செய்தபோது அதனை முறியடித்து திட்டமிட்டப்படி 05.08.2020 சிலை நிறுவதற்கு முழு பாதுகாப்பு அளித்து தற்பொழுது மயிலாடுதுறையில் நாகப்ப படையாட்சி சிலை நிறுவப்பட்டுள்ளது. அதே போல் பிற்படுத்தப்பட்ட நல கமிஷன் தலைவராக நீதியரசர் தணிக்காசலம் அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. ஆகவே எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அல்லது தேர்தல் வாக்குறுதியாக வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பினை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கையை ஏற்று எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அல்லது தேர்தல் வாக்குறுதியாக வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர்களின் வாக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெற்றதைப் போல் பொது தேர்தலிலும் அதிமுகவுக்கு கிடைக்கும் என்று நம்புகிறார்களாம்.